search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குப்பை அள்ளும் பேட்டரி வாகனங்களை    மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு
    X

    கோப்புபடம். 

    குப்பை அள்ளும் பேட்டரி வாகனங்களை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

    • 10 பேட்டரி வாகனங்கள் சீரமைக்கப்பட்டு 1-வது மண்டல அலுவலகத்துக்கு கொண்டு வரப்பட்டது.
    • பேட்டரி வாகனங்களை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் பணிகளில் அதிகாரிகள் தீவிர கவனம் செலுத்தி வருகிறார்கள்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாநகராட்சி பகுதியில் குப்பை அள்ளுவதற்கு வாங்கப்பட்ட பேட்டரி வாகனங்களில் முறைகேடு புகார் எழுந்து, ஆவணங்களில் உள்ள, வாங்கப்பட்ட பேட்டரி வாகனங்கள் அனைத்தையும் மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். பழுதடைந்த வாகனங்களை சீரமைத்து குப்பை அள்ளுவதற்கு வழங்க வேண்டும் என்று உதவி ஆணையாளர்கள், தனியார் ஒப்பந்ததாரர்கள் ஆகியோரிடம் வலியுறுத்தப்பட்டது. இதன் விளைவாக தற்போது 10 பேட்டரி வாகனங்கள் சீரமைக்கப்பட்டு 1-வது மண்டல அலுவலகத்துக்கு கொண்டு வரப்பட்டது.

    இந்த குப்பை அள்ளும் வாகனங்களை ஆணையாளர் கிராந்திகுமார் பாடி ஆய்வு செய்தார். வீடு, வீடாக சென்று குப்பை பெறுவதற்கு இந்த பேட்டரி வாகனங்களின் பங்களிப்பு முக்கியமாக உள்ளது. இதனால் பேட்டரி வாகனங்களை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் பணிகளில் அதிகாரிகள் தீவிர கவனம் செலுத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×