என் மலர்
உள்ளூர் செய்திகள்
அரசு போக்குவரத்துக்கழக பணியாளர்கள் பணிமனைகளில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் அறிவிப்பு
- பின்னோக்கி பஸ்களை இயக்கும் போது சிக்னல் தர கட்டாயம் ஒருவரை நிறுத்தி வைத்துக் கொள்ள வேண்டும்.
- பணிமனைக்குள் பஸ்கள் 5 கி.மீ., வேகத்தில் மட்டுமே இயக்க வேண்டும்.
திருப்பூர்:
அரசு போக்குவரத்து கழக பணிமனைகளில் சில விதிமீறல்கள் நடப்பதாக தொடர் புகார்கள் வந்ததை தொடர்ந்து டிரைவர், நடத்துனர், தொழில்நுட்ப பணியாளர் பின்பற்ற வேண்டிய வழிமுறை குறித்த சில வழிகாட்டுதல்களை போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.
அதன்படி தொழில்நுட்ப பணிகளுக்காக பணிமனைக்குள் பஸ் இயக்கப்படும் போது லைெசன்ஸ் பெற்ற ஒரு பணியாளர் மட்டுமே பஸ்களை நகர்த்த வேண்டும். வேறு ஒருவர் இயக்க கூடாது. பின்னோக்கி பஸ்களை இயக்கும் போது சிக்னல் தர கட்டாயம் ஒருவரை நிறுத்தி வைத்துக் கொள்ள வேண்டும்.
ஓய்வறைகளில் புகை பிடிப்பது, மது அருந்துவது கூடாது. மீறினால், ஒழுங்கு நடவடிக்கைக்கு பரிந்துரைக்கப்படும். மதுஅருந்திய நிலையில் பணிக்கு வருபவர் குறித்து பாதுகாவலர் கண்காணிக்க வேண்டும். பஸ்சில் எளிதில் தீ பற்றக்கூடிய பொருட்கள், வெடி பொருட்களை ஏற்ற எந்த நேரத்திலும் அனுமதிக்க கூடாது. பணிமனைக்குள் பஸ்கள் 5 கி.மீ., வேகத்தில் மட்டுமே இயக்க வேண்டும் என்பன உள்ளிட்ட வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ளது.
இது குறித்து போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் தரப்பில் இருந்து திருப்பூர் உள்பட அனைத்து கிளை மண்டல மேலாளர்களுக்கு விரிவான சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.