என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
உடுமலையில் அகல் விளக்குகள் தயாரிக்கும் பணிகள் மும்முரம்
- சிறிய விளக்குகள் முதல் பெரிய விளக்குகள் வரை பலதரப்பட்ட வகைகளில் தயார் செய்யப்பட்டுள்ளது.
- சிறிய அளவிலான ஆயிரம் அகல் விளக்குகள் ரூ.700-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
உடுமலை:
இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான திருக்கார்த்திகை தீபத்திருவிழா வருகிற டிசம்பர் மாதம் 12-ந் தேதி கொண்டாடப்படுகிறது. கார்த்திகை தீபத் திருவிழா அன்று வீடுகளில் வரிசையாக தீபங்கள் ஏற்றி அழகு படுத்துவது வழக்கம். இதுேபால் கோவில்களில் பக்தர்கள் புதிய விளக்குகளில் தீபங்கள் ஏற்றுவார்கள். கார்த்திகை திருவிழா நெருங்குவதையொட்டி உடுமலை பூளவாடியில் அகல் விளக்கு தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. சிறிய விளக்குகள் முதல் பெரிய விளக்குகள் வரை பலதரப்பட்ட வகைகளில் தயார் செய்யப்பட்டுள்ளது.
சிறிய அளவிலான ஆயிரம் அகல் விளக்குகள் ரூ.700-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் அகல்விளக்குகள் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு விற்பனைக்காக கொண்டு செல்லப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இது தவிர கேரளா, ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் அகல் விளக்குகள் விற்பனைக்காக கொண்டு செல்லப்படுகின்றன.
அகல் விளக்கு தயாரிப்பு குறித்து தொழிலாளி ஒருவர் கூறியதாவது:- உடுமலை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அகல் விளக்குகள் தயாரிப்பதற்கு கோதவாடி, கொழுமம் ஆகியவற்றில் உள்ள குளத்து மண் பயன்படுத்தப்படுகிறது. அங்கு மண் எடுப்பதில் சிரமம் உள்ளது. பூளவாடியில் இரண்டு குடும்பங்கள் மட்டுமே மண்பாண்ட தொழில் செய்து வரும் நிலையில் உப்பாறு ஓடையில் களிமண் எடுத்து மண்பாண்ட தொழிலில் ஈடுபட்டு வருகிறோம். அரசின் சார்பில் அடையாள அட்டை இருந்தும் மண் எடுக்க முடியவில்லை என மண்பாண்ட தொழிலாளர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். மண் எடுப்பதற்கான வழிமுறைகளை எளிதாக்க வேண்டும் என்பது மண்பாண்ட தொழிலாளர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.