என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
வடகிழக்கு பருவமழை: திருப்பூர் மாநகரில் முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரம் - டெங்குவை தடுக்க வீடு வீடாக ஆய்வு
- தேங்கி கிடக்கும் திடக்கழிவுகள் மழை நீர் செல்வதில் பெரும் தடையாக உள்ளது.
- டெங்கு பாதிக்கும் நபர் வசிக்கும் வீடுகளை சுற்றி, கொசு மருந்து தெளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.
திருப்பூர்:
திருப்பூர் மாநகராட்சி பகுதியிலுள்ள 4 மண்டலங்களில் 60 வார்டுகள் உள்ளன. 2 லட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகள், ஆயிரக்கணக்கான வர்த்தக, தொழிற்சாலை கட்டடங்கள் உள்ளன. பெரும்பாலான முக்கிய ரோடுகளில் பிரதான கழிவு நீர் கால்வாய்களும் மற்ற பகுதிகளில் கிளை கால்வாய்களும் அமைந்துள்ளன.இவற்றில் சேகரமாகும் திடக்கழிவுகள் நீண்ட காலமாக தேங்கி, கழிவு நீர் செல்ல வழியின்றி மழை நாட்களில் பெருக்கெடுத்தும், தாழ்வான பகுதியில் தேங்கியும் அவதியை ஏற்படுத்துகிறது.
நகரில் மையப்பகுதியில் கடந்து செல்லும் நொய்யல் ஆறும், அத்துடன் சென்று சேரும் ஜம்மனை ஓடை, மந்திரி வாய்க்கால், சபரி ஓடை, சங்கிலி பள்ளம் ஆகிய முக்கியமான நீர் வழிப்பாதைகளாக உள்ளன.
இவற்றில் கழிவுநீர் செல்ல தடையாக இருந்த நூற்றுக்கணக்கான ஆக்கிரமிப்பு வீடுகள் கடந்த சில மாதங்களில் அகற்றப்பட்டன. மேலும் ஓடைக்கரைகள் மற்றும் மையங்களில் வளர்ந்து பரவிக்கிடக்கும் புதர்கள், தேங்கி கிடக்கும் திடக்கழிவுகள் மழை நீர் செல்வதில் பெரும் தடையாக உள்ளது.
தற்போது வடகிழக்கு பருவ மழை துவங்கியுள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. அதற்காக பகுதிவாரியாக பொறுப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டு எந்திரங்கள், வாகனங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.அவ்வகையில், மண்டல வாரியாக தலா 8 ஜே.சி.பி., தலா 2 டிராக்டர் மற்றும் டிப்பர் மற்றும் ஒரு ரோலர் வாகனம் வழங்கப்பட்டுள்ளது.
இது தவிர 6 செயின் டோசர் வாகனங்கள், குறுகலான பகுதிகளில் தூர்வாரும் வகையில் பாப் கேட் எந்திரங்கள், பொக்லைன் உள்ளிட்ட வாகனங்கள் நொய்யல் ஆறு மற்றும் ஓடைகளில் துார் வாரும் பணியை மேற்கொண்டுள்ளன.
இந்நிலையில் குடியிருப்பு மற்றும் வர்த்தக பகுதிகளில், பாதாள சாக்கடை குழாய்களில் ஏற்பட்டுள்ள அடைப்புகளை சரி செய்யும் வகையில் எந்திரம் பொருத்திய இரு புதிய வாகனங்கள் தருவிக்கப்பட்டுள்ளன.இவற்றை மேயர் தினேஷ்குமார், துணை மேயர் பாலசுப்ரமணியம் மற்றும் கமிஷனர் கிராந்திகுமார் துவக்கி வைத்தனர்.
இதுதவிர புனேவிலிருந்து அதிக திறன் கொண்ட ஸ்லிட்டிங் எந்திரம் பொருத்திய வாகனம் வரவழைக்கப்பட்டுள்ளது. இவ்வாறான எந்திரங்கள் மூலம், பாதாள சாக்கடை குழாய்களில் அடைப்பு நீக்கம் செய்து, தூர்வாரவும் முடியும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
திருப்பூர் மற்றும் அவிநாசியில் சில நாட்களாக இரவில் மழை வெளுத்து வாங்கும் நிலையில் ஆங்காங்கே மழைநீர் தேங்கி, டெங்கு பரப்பும் கொசு உற்பத்தியும் அதிகரித்து வருகிறது. இதனால், டெங்கு காய்ச்சல் பாதிப்புக்கு ஆளாவோரின் எண்ணிக்கை அதிகரிக்க துவங்கியிருக்கிறது.
இது குறித்து வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சக்தி தங்கராஜ் கூறுகையில்,கொசு ஒழிப்பு பணியாளர்கள் வீடு, வீடாக சென்று, கொசுப்புழு உருவாகாத வகையில், 'அபேட்' மருந்து தெளித்து வருகின்றனர். மழைநீர் தேங்கி நிற்காதவாறு, மக்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டு வருகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்