search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கல்லூரி மாணவர்கள் சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி
    X

    பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி நடைபெற்ற காட்சி. 

    கல்லூரி மாணவர்கள் சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி

    • பிளாஸ்டிக், தெர்மாகோல் தட்டு மற்றும் குவளைகள், பிளாஸ்டிக் உறிஞ்சி குழாய்கள் ஆகியவற்றை அறவே தவிர்க்க வேண்டும்.
    • கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் மற்றும் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் சுவாமிநாதன் ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    திருப்பூர்:

    தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் திருப்பூர் மாவட்டம் மற்றும் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-2 இணைந்து பல்லடம் பேருந்து நிலையத்தில் ஒருதடவை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக்கை தவிர்க்க வேண்டியும், மஞ்சப்பையை பயன்படுத்த வேண்டியும் கலைநிகழ்ச்சி நடத்தினர்.

    முன்னதாக, நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் பிளாஸ்டிக் தவிர்ப்பு பற்றி விரிவாக பொது மக்களுக்கு விளக்கினார். மேலும் பிளாஸ்டிக், தெர்மாகோல் தட்டு மற்றும் குவளைகள், பிளாஸ்டிக் உறிஞ்சி குழாய்கள் ஆகியவற்றை அறவே தவிர்க்க வேண்டும்.

    இயற்கையாக கிடைக்கக்கூடிய மற்றும் எளிதில் மக்கக்கூடிய பொருட்களான துணிப்பைகள், வாழை இலை, காகித குவளைகள் போன்றவற்றை பயன்படுத்தவேண்டும்.நெகிழிப் பொருட்கள், மண் வளத்தை கெடுத்து விடும்.பிளாஸ்டிக் மாசில்லா தமிழகத்தை உருவாக்க அனைவரும் சபதம் எடுப்போம் என்று பேசினார். பிறகு மாணவச் செயலர்கள் அருள்குமார், அரவிந்தன், ரமேஷ் ஆகியோர் தலைமையில் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. பேருந்து நிலையத்தில் இருக்கும் பொது மக்களுக்கு மஞ்சப்பைகள் மற்றும் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் வழங்கி நெகிழி பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகளை எடுத்துக் கூறினர்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட சுற்றுச்சூழல் இளம் பொறியாளர்கள், அலுவலர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் மற்றும் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் சுவாமிநாதன் ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    Next Story
    ×