search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காதலர்தினத்தையொட்டி திருப்பூர் மாநகராட்சி பூங்காவில் குவிந்த காதல் ஜோடிகள்
    X

    திருப்பூர் மாநகராட்சி பூங்காவில் குவிந்த காதல் ஜோடிகள். 

    காதலர்தினத்தையொட்டி திருப்பூர் மாநகராட்சி பூங்காவில் குவிந்த காதல் ஜோடிகள்

    • திருப்பூர் மாநகராட்சி வெள்ளி விழா பூங்காவில் இன்று காலை முதல் ஏராளமான காதல்ஜோடியினர் குவிந்தனர்.
    • ஓட்டல்கள், ஐஸ்கிரீம் பார்களுக்கு சென்று தங்களுக்கு விருப்பப்பட்ட உணவுகளை சாப்பிட்டனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தில் இன்று காதலர் தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி திருப்பூர் மாநகராட்சி வெள்ளி விழா பூங்காவில் இன்று காலை முதல் ஏராளமான காதல்ஜோடியினர் குவிந்தனர். அவர்கள் ஒருவருக்கொருவர் ரோஜா பூக்களை வழங்கி காதலர் தின வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர். மேலும் ஓட்டல்கள், ஐஸ்கிரீம் பார்களுக்கு சென்று தங்களுக்கு விருப்பப்பட்ட உணவுகளை சாப்பிட்டனர்.

    இதேப்போல் உடுமலை அமராவதி பூங்கா, அமராவதி அணை உள்ளிட்ட இடங்களிலும் காதல்ஜோடியினர் திரண்டனர்.

    மேலும் சில இளைஞர்கள், இளம்பெண்கள் இன்று தங்களது காதலை வெளிப்படுத்தினர். அசம்பாவித சம்பவங்களை தடுப்பதற்காக மாவட்டம் முழுவதும் பூங்கா உள்ளிட்ட இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    காதலர் தினத்தையொட்டி திருப்பூர் பூ மார்க்கெட்டுகளில் விதவிதமான ரோஜா பூக்கள் விற்பனைக்கு குவிக்கப்பட்டு இருந்தன. இருப்பினும் எதிர்பார்த்த அளவுக்கு விற்பனை இல்லை என வியாபாரிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×