என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
திருப்பூரில் சாலையோர வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்
- திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் எதிரில் சாலையோர வியாபாரிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
- முடிவில் திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் பவன் குமார் கிரியப்பனவரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
திருப்பூர்:
திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் எதிரில் சாலையோர வியாபாரிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு., சாலையோர வியாபாரிகள் சங்க செயலாளர் பி.பாலன் தலைமை வகித்தார்.
20 ஆண்டுகளுக்கு மேலாக வியாபாரம் செய்து வரும் சாலையோர வியாபாரிகளை முறையாக கணக்கெடுத்து அடையாள அட்டை உடனடியாக வழங்க வேண்டும், சாலையோர வியாபாரிகளுக்கு சிறு தொழில் கடன் அலைக்கழிக்காமல் வங்கிகளில் வழங்க வேண்டும், மதுரை, ஈரோடு மாநகராட்சிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு மாநகராட்சி நிர்வாகமே, தள்ளு வண்டி வழங்கியுள்ளது.
அது போல் இங்கும் வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற சாலையோர வியாபாரிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர். முடிவில் திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் பவன் குமார் கிரியப்பனவரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.