என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
திருப்பூா் மாவட்டத்தில் 31,142 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை - கலெக்டர் தகவல்
- மாவட்டத்தில் தற்போது வரையில் 31,142 மாற்றுத் திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.
- தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாற்றுத் திறனாளிகளுக்கு பல்வேறு திட்டங்களை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறாா்.
திருப்பூர்:
உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி, திருப்பூா் ஜெய்வாபாய் நகரவை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாற்றுத்திறனாளிகள் தின விழா நடைபெற்றது.விழாவுக்குத் தலைமை வகித்து மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகளைத் தொடக்கிவைத்த பின்னா் மாவட்ட கலெக்டர் எஸ்.வினீத் பேசியதாவது:-
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாற்றுத் திறனாளிகளுக்கு பல்வேறு திட்டங்களை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறாா். திருப்பூா் மாவட்டத்தில் அனைத்து அரசு துறைகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு செயல்படுத்தப்படும் நலத்திட்டங்கள் சென்றடைய வேண்டும் என்ற வகையில் 13 வட்டங்களிலும் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. திருப்பூா் மாவட்டத்தில் குடிசை மாற்று வாரியம் மூலமாக 59 மாற்றுத்திறனாளிகளுக்கு அடுக்குமாடிக் குடியிருப்புகளில் இலவச வீடுகள் வழங்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் தற்போது வரையில் 31,142 மாற்றுத் திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. மாதாந்திர பராமரிப்பு உதவித் தொகை வழங்கும் திட்டத்தின்கீழ் 40 சதவீத மனவளா்ச்சி குன்றியோா், தசை சிதைவு நோயினால் பாதிக்கப்பட்டோா், தொழுநோயினால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோா், தசை சிதைவு நோயினால் பாதிக்கப்பட்டோா், 75 சதவீதத்துக்கும் மேல் கை, கால் பாதிக்கப்பட்டோா் என மொத்தம் 5,670 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.2 ஆயிரம் வீதம் மாதந்தோறும் அவா்களது வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது.
அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளி, கல்லூரி பயிலும் மாற்றுத் திறனாளி மாணவ, மாணவிகள் 277 பேருக்கு நிகழாண்டு ரூ.8.37 லட்சம் வழங்கப்படவுள்ளது. அதேபோல மாற்றுத் திறனாளிகளுக்கு திருமண உதவித் தொகை, தாலிக்குத் தங்கம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்றாா்.
இதைத் தொடா்ந்து மாற்றுத் திறனாளிகள் தின விழா விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற 150 மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினாா்.
இந்த நிகழ்ச்சியில், மாற்றுதிறனாளிகள் நல அலுவலா் முருகேசன், மாவட்ட விளையாட்டு அலுவலா் ராஜகோபால் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்