search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேசிய கல்–விக்–கொள்கையை ரத்து செய்ய  கோரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
    X

    பல்லடத்தில் நடைபெற்ற பிரச்சார இயக்கத்தில் பங்கேற்றவர்கள். 

    தேசிய கல்–விக்–கொள்கையை ரத்து செய்ய கோரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

    • பல்லடம் பஸ் நிலையம் முன்பு பிரச்சார இயக்கம் நடைபெற்றது.
    • தேசிய கல்விக்கொள்கை 2020-ஐ ரத்து செய்ய வேண்டும்.

    தாராபுரம்:

    இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் பல்வேறு கோரிக்கைகள் குறித்து தாராபுரம் பஸ் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    பிரசார இயக்கத்தின் போது புதிய தேசிய கல்வி கொள்கையினால் 3,5,6-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு 9,10,11,12-ம் வகுப்புகளுக்கு பருவ தேர்வு என்பது நாட்டின் ஏழை-எளிய, கிராமப்புற குழந்தைகளின் கல்வி வாய்ப்பை தட்டி பறிப்பதோடு, மாணவர்களின் பள்ளி இடைநிற்றலை அதிகரிக்கும். மும்மொழி கொள்கை குழந்தைகளின் கல்விச்சுமையை அதிகரிப்பதோடு தாய்மொழி வழிக்கல்வியை கேள்விக்குறியாக்கும். 20 மாணவர்களுக்கு கீழுள்ள பள்ளிகள் மூடப்படும் என்பதும், வளாகப்பள்ளிகள் அமைக்கப்படும் என்பதும் ஆரம்பக்கல்வியை முற்றிலும் பாதிக்கும்.

    இடைநிலைக்கல்வி முடிந்தவுடன் கொண்டு வரப்படும் தொழிற்கல்வி, குலக்கல்வித்திட்டமாக அமையும். பள்ளிக்கல்வி, உயர்கல்வி, ஆராய்ச்சி கல்வி என அனைத்தும் தனியார் மயமாதலின் மூலம் கல்வி முற்றிலும் வணிகமயமாக்கப்படும். தேர்வுகள் நடத்திட தனியார் நிறுவனங்கள் அனுமதிக்கப்படும். எனவே தேசிய கல்விக்கொள்கை 2020-ஐ ரத்து செய்ய வேண்டும்.

    தன்பங்கேற்பு ஓய்வூதியத்திட்டத்தால் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் ஓய்வுக்கால வாழ்வாதாரம் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே தன் பங்கேற்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.தமிழ்நாட்டில் ஆட்சியில் உள்ள தி.மு.க. தனது தேர்தல் அறிக்கையில் கூறியவாறு புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதியத்திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் கோரி பிரசாரம் நடைபெற்றது.

    பல்லடம் பஸ் நிலையம் முன்பு பிரச்சார இயக்கம் நடைபெற்றது. இதில் இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

    Next Story
    ×