search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பருத்தி சாகுபடியை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?
    X

    கோப்புபடம். 

    பருத்தி சாகுபடியை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

    • பருத்தி விளைச்சல் குறைந்ததன் விளைவாக தற்போது ஒட்டுமொத்த ஜவுளி துறையும் முடங்கியுள்ளது.
    • பருத்திக்கு ஒரு குறிப்பிட்ட விலையை நிர்ணயம் செய்து விலை சரியும்போது அதை அரசே கொள்முதல் செய்யலாம்.

    குடிமங்கலம்:

    தொடர் நஷ்டம், விலைவாசி உயர்வு, ஆட்கள் பற்றாக்குறை போன்ற காரணங்களால் விவசாயிகள் மெல்ல மெல்ல பருத்தி விவசாயத்தை கைவிட்டு வேறு பயிர்களுக்கு மாற துவங்கினர்.பருத்தி விளைச்சல் குறைந்ததன் விளைவாக தற்போது ஒட்டுமொத்த ஜவுளி துறையும் முடங்கியுள்ளது.

    ஜவுளி துறைக்கு மூலப்பொருளான பருத்தி விவசாயத்தை மீண்டும் அதிகரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.தேசிய ஊரக வேலை உறுதி திட்ட தொழிலாளர்களை பருத்தி விவசாயத்தின் பக்கம் திருப்பலாம். பருத்திக்கு ஒரு குறிப்பிட்ட விலையை நிர்ணயம் செய்து விலை சரியும்போது அதை அரசே கொள்முதல் செய்யலாம். பருத்தி சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கலாம். இது போன்ற நடவடிக்கைகளை எடுப்பதன் மூலம் பருத்தி விவசாயத்தை மீண்டும் மீட்டெடுக்க முடியும் என ஜவுளி உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×