என் மலர்
உள்ளூர் செய்திகள்

அ.தி.மு.க. சார்பில் அண்ணாவின் உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்ட காட்சி.
அ.தி.மு.க. சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா
- அண்ணாவின் உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
- திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மாநகராட்சி அருகில் மரியாதை செலுத்தப்பட்டது.
திருப்பூர் :
பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு, திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மாநகராட்சி அருகில் திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளரும் முன்னாள் துணை சபாநாயகருமான பொள்ளாச்சி வி.ஜெயராமன் எம்.எல்.ஏ., தலைமையில் அண்ணாவின் உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல். ஏ., சு.குணசேகரன், முன்னாள் எம். பி.,சி.சிவசாமி, இணை செயலாளர் சங்கீதா சந்திரசேகர் , பகுதி செயலாளர்கள் கண்ணப்பன் அன்பகம் திருப்பதி, கே.பி.ஜி. மகேஷ்ராம், ஹரிஹரசுதன், திலகர் நகர் சுப்பு, கருணாகரன், தொழிற்சங்க செயலாளர் கண்ணபிரான், ஆண்டவர் பழனிச்சாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Next Story






