என் மலர்
உள்ளூர் செய்திகள்

நிகழ்ச்சியில் திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரி விஜயலலிதாம்பிகை தலைமையில் கறிக்கடைக்காரர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்ட போது எடுத்த படம்.
தரமான கோழி இறைச்சியை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் - கறிக்கடைக்காரர்களுக்கு அதிகாரி அறிவுறுத்தல்

- கோழிகளை சுத்தமாக பராமரித்து அதனை பொதுமக்களுக்கு வழங்க வேண்டும்.
- கடைகளில் விற்கப்படும் கோழிகளை குளிர்சாதன பெட்டியில் வைத்து அதனை பொதுமக்களுக்கு கொடுக்கக்கூடாது என்றார்.
திருப்பூர் :
திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை மற்றும் கறிக்கோழி உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் கோழிக்கறி விற்பனையாளர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு இன்று நடைபெற்றது.
இதில் திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரி விஜயலலிதாம்பிகை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் .அப்போது அவர் பேசியதாவது:- கறிக்கடைகளில் சுகாதாரத்தை பேணி காக்க வேண்டும். கோழிகளை சுத்தமாக பராமரித்து அதனை பொதுமக்களுக்கு வழங்க வேண்டும்.
எக்காரணத்தை கொண்டும் கெட்டுப் போன கோழிகளை பொதுமக்களுக்கு வழங்கக்கூடாது. புரத சத்துள்ள சுகாதாரமான கோழிகளை மட்டுமே பொதுமக்களுக்கு விற்பனை செய்ய வேண்டும்.
அதேபோல் கடைகளில் விற்கப்படும் கோழிகளை குளிர்சாதன பெட்டியில் வைத்து அதனை பொதுமக்களுக்கு கொடுக்கக்கூடாது என்றார்.
நிகழ்ச்சியில் திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ,கறிக்கோழி உற்பத்தியாளர் சங்க செயலாளர் சின்னச்சாமி, ஆலோசகர் ராம்ஜி மற்றும் நிர்வாகிகள், கறி கடை விற்பனையாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.