என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
உடுமலை பஸ் நிலையத்தில் அடிப்படை வசதிகள் இல்லாமல் தவிக்கும் பயணிகள்
- இருக்கைகள் சேதமடைந்தும் இல்லாமலும் உள்ளதால் மணிக்கணக்கில் கால்கடுக்க காத்திருக்க வேண்டியது உள்ளது.
- குடிநீர் வசதியும் இல்லாததால் விலைக்கு தண்ணீரை வாங்கி குடிக்க வேண்டிய சூழல் உள்ளது.
உடுமலை :
உடுமலை மத்திய பஸ் நிலையத்தில் இருந்து சுற்றுப்புற கிராமங்களுக்கும் நாள்தோறும் ஏராளமான பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. வெளி மாவட்ட பஸ்களும் உடுமலை பஸ் நிலையத்திற்கு வந்து செல்கிறது. இதன் காரணமாக நாள்தோறும் மக்கள் நடமாட்டம் அதிக அளவில் இருந்து வருகிறது.
இந்த சூழலில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் மத்திய பஸ் நிலையத்தில் அடிப்படை கட்டமைப்புகள் மேம்படுத்தவில்லை.சேதம் அடைந்த இருக்கைகள், காட்சிப் பொருளான குடிநீர் தொட்டி, சுகாதார வளாக வசதி இல்லாத நிலை உள்ளது. இதனால் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள். இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், உடுமலையின் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள், வெளிமாவட்ட மக்கள் ஒன்றிணைந்து பிரிந்து செல்லும் இடமாக உடுமலை மத்திய பஸ் நிலையம் உள்ளது.இங்கு பஸ்சுக்காக காத்துக் கொண்டிருக்கும் பொதுமக்களுக்கு அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்யவில்லை. இருக்கைகள் சேதமடைந்தும் இல்லாமலும் உள்ளதால் மணிக்கணக்கில் கால்கடுக்க காத்திருக்க வேண்டியது உள்ளது. அல்லது தரையில் அமர வேண்டிய சூழல் உள்ளது. குடிநீர் வசதியும் இல்லாததால் விலைக்கு தண்ணீரை வாங்கி குடிக்க வேண்டிய சூழல் உள்ளது. முக்கியமாக அடிப்படை அத்தியாவசிய தேவைகளில் ஒன்றான சுகாதார வளாக வசதி ஏற்படுத்தி தரவில்லை. இதனால் பெண்கள் ,குழந்தைகள், கர்ப்பிணிகள், இயற்கை உபாதைகளை கழிக்க முடியாமல் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள். இதனால் அவர்கள் உடல் நலம் பாதிக்கப்படக்கூடிய சூழல் உருவாகி உள்ளது.
ஆண்களுக்காக கட்டப்பட்ட சிறுநீர் கழிக்கும் பகுதி பராமரிப்பு இல்லாமல் துர்நாற்றம் வீசியும் சுகாதார சீர்கேட்டையும் ஏற்படுத்தி வருகிறது. நாள்தோறும் பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் பஸ் நிலையத்திற்கு வந்து செல்கின்றனர். பொதுமக்களுக்கு என்ன தேவை என்று அறிந்து அவர்கள் கோரிக்கை வைக்கும் முன்பே நிறைவேற்றித் தர வேண்டியது அவர்களது கடமையாகும். ஆனால் குறைபாடுகள் கண்ணுக்கு தெரிந்தும் கண்டும் காணாமல் செல்வது வேதனை அளிக்கிறது.
உடுமலை மத்திய பஸ் நிலையம் என்பது சுற்றுப்புற கிராம பொதுமக்களை ஒன்றிணைக்கும் பகுதியாகும். இங்கு ஏற்படுகின்ற சிறு குறைபாடு கூட அனைத்து கிராமங்களிலும் எதிரொலிக்க கூடிய சூழல் உள்ளது. இதனால் அரசுக்கு பொதுமக்கள் மத்தியில் அவப்பெயர் ஏற்பட்டு வருகிறது. எனவே உடுமலை மத்திய பஸ் நிலையத்தில் இருக்கைகள், குடிநீர், சுகாதார வளாக வசதி உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டும் என்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்