என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கருணாநிதியின் 4-ம் ஆண்டு நினைவுநாளையொட்டி உடுமலையில் நாளை அமைதிப்பேரணி - தி.மு.க. பொறுப்பாளர் ஜெயராமகிருஷ்ணன் அழைப்பு
- திருப்பூர் தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் ஜெயராமகிருஷ்ணன் அழைப்பு.
- காலை 9.30 மணிக்கு பழைய பேருந்து நிலையத்திலிருந்து அமைதிப் பேரணியாக சென்று புதிய பேருந்து நிலையம் வரை நடைபெற உள்ளது.
மடத்துக்குளம் :
திருப்பூர் தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் இரா.ஜெயராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- முத்தமிழ் அறிஞர் கலைஞரின் 4-ம் ஆண்டு நினைவு நாளை யொட்டி நாளை 7-ந் தேதி காலை 9 மணியளவில் கலைஞரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த வேண்டும்.ஆட்சியில் இருந்த நேரங்களில் பல உன்னத சட்டதிட்டங்களை நிலை நாட்டிய தமிழினத் தலைவர், நம்மை விட்டுப் பிரிந்தாலும் அவர் மீது கொண்ட கொள்கையாலும், சரித்திர சாதனைகளாலும், கலாச்சார நினைவுகளோடு நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
கலைஞரின் நினைவு நாளையொட்டி ஏழை, எளிய பொதுமக்களுக்கும், ஆதரவற்றோர், முதியோர்களுக்கும், மாணவ, மாணவிகளுக்கும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்க மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர், கழக செயலாளர்கள், பொறுப்பாளர்கள், சட்டமன்ற முன்னாள் உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், வார்டு செயலாளர்கள், மற்றும் கிளை கழக செயலாளர்கள், அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், ஏற்பாடு செய்திட வேண்டும்.மேலும் அவரவர் பகுதிகளில் வீட்டு முன்பு கலைஞரின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
நாளை காலை 9.30 மணி அளவில் உடுமலைப்பேட்டை பழைய பேருந்து நிலையத்திலிருந்து அமைதிப் பேரணியாக சென்று புதிய பேருந்து நிலையம் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணா சிலை முன்பு வைக்கப்பட்டுள்ள கருணாநிதியின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.இந்நிகழ்ச்சியில் கழக நிர்வாகிகள், துணை அமைப்புகளின் அமைப்பாளர்கள், கழக உடன்பிறப்புகள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.