என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
அடிப்படை வசதி கோரி அங்கேரிப்பாளையம் மக்கள் மனு
- குடிநீர், தார்ரோடு, சாக்கடை போன்ற அடிப்படை வசதிகள் இன்றி அவதிப்பட்டு வருகிறோம்.
- பாறைகுழியை மூடியதற்கு பிறகு குப்பை கழிவுகளை எங்கே கொட்டுவது என்று திண்டாடி வருகிறோம்.
திருப்பூர் :
திருப்பூர் வடக்கு வட்டம் அங்கேரிப்பாளையம் எம்.எஸ்.எம். மணி நகரில் வசிக்கும் பொதுமக்கள் மாவட்ட கலெக்டரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-எங்கள் பகுதியில் குடிநீர், தார்ரோடு, சாக்கடை போன்ற அடிப்படை வசதிகள் இன்றி அவதிப்பட்டு வருகிறோம்.
எங்கள் பகுதியில் இருந்த பாறைகுழியை மூடியதற்கு பிறகு குப்பை கழிவுகளை எங்கே கொட்டுவது என்று திண்டாடி வருகிறோம். தெருக்களில் மாநகராட்சி சார்பில் குப்பைத் தொட்டியும் அமைக்கப்படவில்லை. குடிநீர் தட்டுப்பாடும் ஏற்படுகிறது. சாலைகள் பள்ளம் மேடாக உள்ளது. வாகனங்களில் செல்ல முடியவில்லை. இப்படியாக கடந்த 15 வருடங்களாக அவதிப்பட்டு வருகிறோம். இது குறித்து மாநகராட்சி அதிகாரிகளிட்ம் முறையிட்டும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. ஆகவே இந்த பகுதியில் போதிய அடிப்படை வசதிகளை செய்து தருமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.