என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
திருப்பூரில் சனிக்கிழமை தோறும் ஆக்கிரமிப்புகளை அகற்ற திட்டம்
- முக்கிய ரோடுகளில், ஆக்கிரமிப்பு அகற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.
- கோட்ட அளவிலான ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் ;
திருப்பூர் மாவட்ட சாலை பாதுகாப்பு குழுவில் திருப்பூர் நகரப்பகுதியில் உள்ள முக்கிய ரோடுகளில், ஆக்கிரமிப்பு அகற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. அதற்காக, ஆர்.டி.ஓ.,க்கள் தலைமையில் கோட்ட அளவிலான ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.உள்ளாட்சி அமைப்புகள், போலீசார், நெடுஞ்சாலைத்துறை, மின்துறை என சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உறுப்பினராக இணைக்கப்பட்டுள்ளனர்.
கலெக்டர் உத்தரவுப்படி திருப்பூர் ஆர்.டி.ஓ., தலைமையில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது. இது குறித்து கலெக்டர் வினீத் கூறியதாவது:- திருப்பூர் வருவாய் கோட்டத்தில் சனிக்கிழமை தோறும், ஆக்கிரமிப்பு அகற்ற திட்டமிடப்பட்டுள்ளது. ஆர்.டி.ஓ., தலைமையிலான குழுவினர், முறையான முன்னறிவிப்பு செய்து நெடுஞ்சாலைத்துறை, மாநகராட்சி, போலீஸ் மற்றும் வருவாய்த்துறையினர் இணைந்து ஆக்கிரமிப்பு அகற்ற வேண்டும்.ஒவ்வொரு ரோடு வாரியாக, வாரம் தோறும் ஆக்கிரமிப்பு அகற்றி புதிய ஆக்கிரமிப்பு உருவாகாமல் கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.