என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
அலகுமலையில் ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகள் தீவிரம்
- கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த ஜல்லிக்கட்டு இந்த ஆண்டு நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
- கேலரிகள், வாடிவாசல் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது.
பல்லடம் :
பல்லடம்அருகே அலகுமலையில் அலகுமலை ஜல்லிக்கட்டு காளைகள் நல சங்கத்தின் சார்பில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. கொரோனாவையொட்டி கடந்த இரண்டு ஆண்டு களாக நடைபெறாமல் இருந்த ஜல்லிக்கட்டு இந்த ஆண்டு நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் அந்தப் பகுதியைச் சேர்ந்த சிலர் அலகுமலை பகுதியில் போட்டி நடத்து வதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வரும் 23-ம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் என செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஒரு பேட்டியில் தெரிவித்து இருந்தார்.அதனைத் தொடர்ந்து தற்போது ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவதற்கு கேலரிகள் அமைக்கும் பணிகள், வாடிவாசல் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது.
மேலும் போட்டி யில் கலந்து கொண்ட மாடுகளை பிடிப்பதற்கான தனி இடமும் அதன் தொடர்ச்சியாக அமைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நாளை ஞாயிற்றுக்கிழமை போட்டியில்கலந்து கொள்ள விருப்பமுள்ள மாடுபிடிவீரர்கள் முன்பதிவு பணி தொடங்க உள்ளதாக ஜல்லிக்கட்டு காளைகள் நல சங்கத்தின் தலைவர் பழனிசாமி தெரிவித்தார்.