என் மலர்
உள்ளூர் செய்திகள்

பறிமுதல் செய்யப்பட்ட வாகனம்
அவிநாசியில் உரிமம் இல்லாமல் இயங்கிய தனியார் பள்ளி வாகனம் பறிமுதல்
- தனியாா் பள்ளி வாகனத்தை ஆய்வு செய்யப்பட்டன.
- பள்ளி வாகனத்தில் இருக்க வேண்டிய பல்வேறு அம்சங்கள் இல்லாமல் இருப்பதும் தெரியவந்தது.
அவிநாசி:
அவிநாசி வட்டார போக்குவரத்து அலுவலா் பாஸ்கா், ஆட்டையாம்பாளையம் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தாா். அப்போது பள்ளி குழந்தைகளை அழைத்து கொண்டு அவ்வழியாக வந்த தெக்கலூா் பகுதியில் செயல்பட்டு வரும் தனியாா் பள்ளி வாகனத்தை ஆய்வு செய்தாா்.
அப்போது, பள்ளி வாகனம் உரிமம் இல்லாமல் இயக்கப்பட்டது தெரியவந்தது. மேலும், வாகனத்தில் கேமரா பொருத்தப்படாமலும், பள்ளி வாகனத்தில் இருக்க வேண்டிய பல்வேறு அம்சங்கள் இல்லாமல் இருப்பதும் தெரியவந்தது.
இதையடுத்து, அந்த வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நிறுத்தப்பட்டது.
Next Story






