என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
உடுமலை, பெதப்பம்பட்டி ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் கொப்பரை கொள்முதல்
- தென்னை விவசாயிகள் கடுமையாக பாதித்து வருகின்றனர்.
- 3 ஆயிரம் டன் சாதா கொப்பரையும், 100 டன் பந்து கொப்பரையும் கொள்முதல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
மடத்துக்குளம் :
உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் வட்டாரத்தில் தென்னை சாகுபடி பிரதானமாக உள்ளது.இப்பகுதிகளில் ஏறத்தாழ 2 லட்சம் ஏக்கர் பரப்பளவில் தென்னை சாகுபடி உள்ள நிலையில் விவசாயிகள் கொப்பரை உற்பத்தி களங்கள் அமைத்து கொப்பரை உற்பத்தி செய்தும், தேங்காயை நேரடியாக விற்பனை செய்தும் வருகின்றனர்.மூன்று வட்டாரத்திலும் 300க்கும் மேற்பட்ட கொப்பரை களங்கள் செயல்பட்ட நிலையில் விலை குறைந்ததால் பெரும்பாலான களங்கள் மூடப்பட்டும், தேங்காய்க்கு விலை இல்லாததால் தோப்புகளில் தேங்கியும் வருகிறது. கடந்த ஒரு ஆண்டாக தேங்காய்க்கு உரிய விலை கிடைக்காதது, கொப்பரை விலை கடும் சரிவை சந்தித்து கிலோ 80 முதல் 85 வரை மட்டுமே விற்று வருவது, உப பொருட்களாக மட்டை, தொட்டி என அனைத்தும் விலை சரிவு ஏற்பட்டுள்ள தோடு நோய் தாக்குதல், இடு பொருட்கள் விலை உயர்வு என தென்னை விவசாயிகள் கடுமையாக பாதித்து வருகின்றனர்.
அதிலும் வியாபாரிகள் சிண்டிகேட், உணவு எண்ணெய் இறக்குமதி உள்ளிட்ட காரணங்களி னால் கொப்பரை விலை அபரிமிதமான சரிவு ஏற்பட்டுள்ளது.எனவே அரசு கொப்பரை கொள்முதல் மையங்கள் திறக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் மத்திய அரசின் நேபட் நிறுவன த்துடன் இணைந்து கொப்பரை கொள்முதல் செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையில் உடுமலை மற்றும் பெதப்பம்பட்டி ஒழுங்கு முறை விற்பனை கூட வளாகங்களில் அரசு கொப்பரை கொள்முதல் மையங்கள் இன்று முதல் செயல்படுகின்றன.
உடுமலை ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தில் 4 ஆயிரம் டன் சாதாரண கொப்பரையும், 100 டன் பந்து கொப்பரையும் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பெதப்பம்பட்டி ஒழுங்கு முறை விற்பனை கூடம், அரசு கொப்பரை கொள்முதல் மையத்தின் வாயிலாக 3 ஆயிரம் டன் சாதா கொப்பரையும், 100 டன் பந்து கொப்பரையும் கொள்முதல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இங்கு விவசாயிகளிடமிருந்து சாதாரண கொப்பரை கிலோ ரூ.108.60க்கும், பந்து கொப்பரை ரூ.117.50க்கும் கொள்முதல் செய்யப்படு கிறது.கொள்முதல் செய்ய ப்படும் கொப்பரைக்கு உரிய தொகையை உடனடியாக விவசாயிகள் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட உள்ளது.
இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:- உடுமலை, பெதப்ப ம்பட்டி ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் அரசு கொப்பரை கொள்மு தல் மையங்கள் செயல்பட தொடங்கியு ள்ளன. விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த கொப்ப ரையை இம்மையங்களுக்கு கொண்டு வந்து விற்பனை செய்யலாம். இதற்கான பதிவு தொடங்கியு ள்ளது. போட்டோ, ஆதார் கார்டு நகல், சிட்டா, அடங்கல், வங்கி பாஸ் புத்தகம் நகல், கூட்டுபட்டாவாக இருந்தால் வி.ஏ.ஓ., உரிமை சான்று இருக்க வேண்டும். உரிய ஆவணங்களுடன் ஒழுங்கு முறை விற்பனை கூடங்களில் பதிவு செய்யலாம். மேலும் விபரங்களுக்கு உடுமலை ஒழுங்கு முறை விற்பனை கூட கண்காணிப்பாளர் செந்தில்குமாரை 94439 62834 என்ற எண்ணிலும் பெதப்பம்பட்டி ஒழுங்கு முறை விற்பனை கூட கண்காணிப்பாளர் மாரியப்பனை 96772 24564 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்