search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மழையால் கொசுக்கள் உற்பத்தி - நோய் தடுப்பு பணிகள்  தீவிரப்படுத்தப்படுமா?
    X

    கோப்புபடம்.

    மழையால் கொசுக்கள் உற்பத்தி - நோய் தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்படுமா?

    • மழையால் உடுமலை நகர் மற்றும் சுற்றுப்பகுதியில் குளிர்ச்சியான நிலை காணப்படுகிறது.
    • வீடுகளுக்கு கொசு ஒழிப்பு பணியாளர்கள் நியமிக்க வேண்டும்.

    உடுமலை :

    உடுமலை மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களில், பரவலாக மழை பெய்து வருகிறது. ஒரு சில இடங்களில் மழையின் தாக்கம் அதிகரித்துள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.இதனைப்பயன்படுத்தி, விவசாயம் சார்ந்த பணிகள் வேகமெடுத்துள்ளன.

    தொடர்ந்து பெய்து வரும் மழையால் நகர் மற்றும் சுற்றுப்பகுதியில் குளிர்ச்சியான நிலை காணப்படுகிறது.அதேநேரம் கிராம ஊராட்சிகளில் நோய்த்தடுப்பு மற்றும் கொசு ஒழிப்புப்பணி மேற்கொள்ள வலியுறுத்தப்பட்டுள்ளது. இது குறித்து கிராம மக்கள் கூறியதாவது:- தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக, ஊராட்சிகளில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான வீடுகளுக்கு கொசு ஒழிப்பு பணியாளர்கள் நியமிக்க வேண்டும். அபேட் மருந்து தெளிப்பது, கொசு மருந்து அடிப்பது, கழிவுநீர் சாக்கடைகளில் கொசு மருந்து தெளிப்பது போன்ற பணிகளில் தீவிரம் காட்ட வேண்டும்.குடியிருப்பு பகுதிகளில் தேங்கும் மழைநீரை உடனடியாக அப்புறப்படுத்த கிராம ஊராட்சிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    காய்ச்சல், வயிற்றுப்போக்கு என நோய் பாதிப்பு பகுதிகள் கண்டறியப்பட்டால் பொது மருத்துவ முகாம் நடத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    Next Story
    ×