என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.
சமூக வலைத்தளம் மூலம் லாட்டரி விற்பனை செய்வதை தடுக்க கோரிக்கை
- கேரள மாநில லாட்டரிகள் சமூக வலைதளங்கள் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
- தொழிலாளர்களின் வாழ்க்கையோடு விளையாடும் லாட்டரி விற்பனையை முழுமையாக தடை செய்ய வேண்டும்.
பல்லடம் :
தமிழ்நாட்டில் லாட்டரி விற்பனைக்கு அரசு தடை விதித்து உள்ளது. இருந்த போதிலும், மறைமுகமாக நம்பர் எழுதியும், சமூக வலைதளங்கள் மூலம் நம்பர்கள் குறிப்பிட்டும் முறைகேடான லாட்டரி விற்பனை நடைபெறுகிறது.
இந்த நிலையில் பல்லடத்தில் கேரள மாநில லாட்டரிகள் சமூக வலைதளங்கள் மூலம் விற்பனை செய்யப்பட்டுவருகிறது. இதுகுறித்து சமூக வலைத்தளங்களில் கேரள மாநில லாட்டரிகளின் படங்கள் வெளியாகி உள்ளது. உளவுத்துறை போலீசாரின் ஆசியோடு இந்த லாட்டரி விற்பனை நடைபெறுகிறதோ என்ற சந்தேகம் உள்ளது.எனவே திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் லாட்டரி வியாபாரிகளுடன் தொடர்பில் இருக்கும் போலீசாரை கண்டறிந்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பல்லடம் பகுதியில் ஏழை தொழிலாளர்களின் வாழ்க்கையோடு விளையாடும் லாட்டரி விற்பனையை முழுமையாக தடை செய்ய வேண்டும். இவ்வாறு சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.






