search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாலையோரங்களில் சிம்கார்டு விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும் - செல்லுலார்  சங்கத்தினர் வலியுறுத்தல்
    X

    சாலையோரங்களில் சிம்கார்டு விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும் - செல்லுலார் சங்கத்தினர் வலியுறுத்தல்

    • செல்போன் நிறுவனங்கள் வியாபாரிகளுக்கு கமிஷன் தொகையை உயர்த்தி தர வேண்டும்.
    • ஜி.எஸ்.டி. வரி விதிப்பு குறித்து விரிவான விளக்கத்தை வணிகவரித்துறையினர் வியாபாரிகளுக்கு நடத்த வேண்டும்.

    பல்லடம் :

    திருப்பூர் மாவட்ட செல்லுலார் சங்கத்தின் ஆலோசனை கூட்டம் பல்லடத்தில் தனியார் திருமண மண்டபத்தில் அதன் தலைவர் ஷேக் ஒளி தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவர்கள் பெரியசாமி, கார்த்திக், துணைச் செயலாளர்கள் கார்த்திக், ஆர்.கே. கார்த்திக், பொருளாளர் ரூபேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.செயலாளர் லிங்குசாமி வரவேற்றார்.

    இதில் பல்லடம் செல்லுலார் சங்கத்தின் தலைவராக முருகன், செயலாளராக ராம்குமார், பொருளாளராக மாதேஷ், ஒருங்கிணைப்பாளராக சேரன் உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டனர்.

    பின்னர் திருப்பூர் மாவட்டத்தில், சாலையோரங்களில் சிம் கார்டு விற்பனை செய்வதை முழுமையாக தடை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜி.எஸ்.டி. வரி விதிப்பு குறித்து விரிவான விளக்கத்தை வணிகவரித்துறையினர் வியாபாரிகளுக்கு நடத்த வேண்டும்.

    செல்போன் நிறுவனங்கள் வியாபாரிகளுக்கு கமிஷன் தொகையை உயர்த்தி தர வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இந்தக் கூட்டத்தில், மாவட்ட துணைப் பொருளாளர் சஞ்சய் குமார், ஒருங்கிணைப்பாளர் அரவிந்த்சாமி மற்றும் பல்லடம், திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த செல்லுலார் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×