என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
தாராபுரத்தில் சாலையோர வியாபாரிகள் சாலை மறியல்
- வியாபாரம் பாதித்து வருவதாக கோரி கடந்த வாரம் விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தருவதாக வாக்குறுதி அளித்திருந்தனர்.
தாராபுரம் :
திருப்பூர் மாவட்டம்தாராபுரம் அண்ணா நகரில் செயல்பட்டு வரும் உழவர் சந்தையில் 85க்கும் மேற்பட்ட விவசாயிகள் விளை பொருட்களை விற்பனை செய்வது வழக்கம். ஆனால் உழவர் சந்தைக்கு முன்பாக விவசாயிகள் அல்லாத வெளி ஆட்கள் சாலையோரங்களில் காய்கறி கடைகளை போடுவதால் அவர்களின் வியாபாரம் பாதித்து வருவதாக கோரி கடந்த வாரம் விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதனை தொடர்ந்து நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தருவதாக வாக்குறுதி அளித்திருந்தனர். அதன்படி இன்று உழவர் சந்தை அருகே வெளி ஆட்கள் கடை போட்டு உள்ளதை எடுக்கக்கோரி நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டது. அதற்கு சாலையோர வியாபாரிகள் ஒன்றிணைந்து எதிர்ப்பு தெரிவித்தனர்.
அதே நேரத்தில் விவசாயிகள் காலையில் தங்களிடம் மொத்தமாக காய்கறிகளை விற்பனை செய்துவிட்டு சென்றுவிடுகின்றனர் .அதை நாங்கள் வாங்கி உழவர் சந்தை விவசாயிகள் போன பிறகு விற்பனையில் ஈடுபட்டு வருகிறோம். அதே நேரத்தில் உழவர் சந்தையில் இருந்து 100 மீட்டர் தொலைவில் விற்பனை செய்து வருகிறோம். இந்த நிலையில் எந்த விதத்திலும் சாலையோர வியாபாரிகளின் காய்கறி விற்பனையால் உழவர் சந்தை விவசாயிகளுக்கு வியாபாரம் பாதிக்கப்படவில்லை. நாங்கள் தொன்று தொட்டு இப்பகுதியில் வியாபாரம் செய்து வருகிறோம்.
மேலும் நகராட்சிக்கு சுங்க வரி செலுத்தி வருகிறோம் .இந்த நிலையில் எங்களை காலி செய்ய நோட்டீஸ் கொடுத்தால் எங்களது வாழ்வாதாரம் முழுவதும் பாதிக்கப்படும் எனக் கூறி தாராபுரம் _பொள்ளாச்சி சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் நடைபாதை கடை வியாபாரிகள் ஈடுபட்டனர் .அப்போது அங்கு வந்த போலீசார் மற்றும் நகராட்சி அதிகாரிகள் இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்து வைத்தனர். இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.