என் மலர்
உள்ளூர் செய்திகள்

அல்லாளபுரம் பகுதியில் மழை காரணமாக அழுகல் ஏற்பட்டுள்ள தக்காளி செடி.
தொடர் மழையால் அழுகும் தக்காளி பழங்கள்
- திருப்பூர் மாவட்டத்தில் தக்காளி, வெண்டைக்காய், பீட்ரூட் உள்ளிட்ட பல்வேறு வகையான காய்கறி பயிர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன.
- பருவமழை பெய்து வருவதால் தக்காளியின் பூக்கள் உதிர்ந்துவிடுகின்றன.
வீரபாண்டி :
திருப்பூர் மாவட்டத்தில் தக்காளி, வெங்காயம், முள்ளங்கி, வெண்டைக்காய்,அவரைக்காய், பீட்ரூட் உள்ளிட்ட பல்வேறு வகையான காய்கறி பயிர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. பருவமழைகளின் போது தக்காளி, வெங்காயம், பீட்ரூட் உள்ளிட்ட பயிர்கள் பாதிப்புக்குள்ளாவது வழக்கம். இதனால் மகசூல் குறைந்து அவற்றின் விலை அதிகரிக்கின்றன. கடந்த சில தினங்களாக மழை பெய்து வருவதால் தக்காளி உற்பத்தி பாதிக்கப்பட்டு வருகின்றது.
இது குறித்து அல்லாளபுரத்தை சேர்ந்த விவசாயி செந்தில்குமார் கூறியதாவது:-
பல்லடம் வட்டார பகுதிகளில் தக்காளி, வெங்காயம் ஆகிய பயிர்கள் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. கடந்த சில தினங்களாக பருவமழை பெய்து வருவதால் தக்காளியின் பூக்கள் உதிர்ந்துவிடுகின்றன. மேலும் தக்காளி அழுக தொடங்கி உள்ளன. ஒரு புறம் மயில்கள் - கோழிகள் மற்றும் பறவைகளின் தாக்குதல் மறுபுறம் மழைபாதிப்பு என இருபுறமும் தாக்குதலால் உற்பத்தி பாதிக்கப்படுகிறது. பரவலாக மழை பெய்து வரும் சூழலிலும் திருப்பூர் மாவட்டத்தில் தக்காளி அதிக அளவில் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதால் தட்டுப்பாடின்றி கிடைத்து வருகிறது. 15கிலோ கொண்ட டிப்பர் ஒன்று 400ரூபாய்க்கும் மேல் கொள்முதல் செய்யப்பட்டுவருகிறது. வெளி மாநிலங்களிலும் மழை பெய்துள்ளதால் திருப்பூருக்கு வெளிமாநிலங்களிலிருந்தும் வரும் தக்காளி மிக மிக குறைவாகவே வருகிறது.
மழையால் அழுகல் அதிகம் ஏற்பட்டு மகசூல் பாதிக்கப்படுகிறது. மழை தொடர்வதால் வரும் நாட்களில் விலை இன்னும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. தீபாவளி பண்டிகை அடுத்த வாரம் வருவதால் பொதுமக்கள் சொந்த ஊருக்குசெல்லாயிருப்பதாலும் அதிக அளவில் காய்கறிகள் வாங்கவில்லை. இன்று ஒரு கிலோ தக்காளி ரூ.24க்கு விற்பனை செய்யப்பட்டது.
அல்லாளபுரம் பகுதியில் மழை காரணமாக அழுகல் ஏற்பட்டுள்ள தக்காளி செடி.






