என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
பஞ்சலிங்க அருவியில் பாதுகாப்பு மேம்பாடு திட்டங்கள் - சுற்றுலா பயணிகள் எதிர்பார்ப்பு
- மேற்குத்தொடர்ச்சி மலையில் மழை பெய்யும் போது சிற்றாறுகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து, பஞ்சலிங்க அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படும்.
- சுற்றுலா பயணிகள் பாதுகாப்பிற்காக பல்வேறு கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது அவசியம் என கருதப்பட்டது.
உடுமலை:
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவிலில் இருந்து 900 மீட்டர் உயரத்தில் வனப்பகுதியில் பஞ்சலிங்க அருவி உள்ளது. மேற்குத்தொடர்ச்சி மலையில் உருவாகும் பல்வேறு சிற்றாறுகள், பஞ்சலிங்க அருவியாக கொட்டுகிறது.ஆண்டு முழுவதும் அருவியில் நீர் வரத்து, சராசரி உயரத்திலிருந்து சாரல் போல கொட்டும் தண்ணீர் என பஞ்சலிங்க அருவியின் சிறப்புகளால் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் அருவிக்கு வந்து செல்கின்றனர். மேற்குத்தொடர்ச்சி மலையில் மழை பெய்யும் போது சிற்றாறுகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து, பஞ்சலிங்க அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படும்.
அப்போது அருவியில் சுற்றுலா பயணிகள் பாதுகாப்புக்காக அமைக்கப்பட்டுள்ள கம்பிகளை முழுவதுமாக மூடி, பல அடிக்கு தண்ணீர் கொட்டும். திடீர் வெள்ளப்பெருக்கினால் அருவியில் கொட்டும் தண்ணீர் சீரான நிலைக்கு திரும்ப பல மணி நேரம் ஆகும்.
கடந்த 2008ல் சிற்றாறுகளில் தண்ணீர் வரத்து பல மடங்கு அதிகரித்து பஞ்சலிங்க அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்போது அருவியில் குளித்து கொண்டிருந்த 13 சுற்றுலா பயணிகள் தண்ணீரில், இழுத்து செல்லப்பட்டனர். பஞ்சலிங்க அருவியின் சீற்றத்துக்கு அதிக உயிர்ப்பலி ஏற்பட்ட சம்பவம் மாநிலம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இச்சம்பவத்திற்கு பிறகு சுற்றுலா பயணிகள் பாதுகாப்பிற்காக பல்வேறு கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது அவசியம் என கருதப்பட்டது.
அப்போதைய தி.மு.க., அரசு, உடனடியாக வனத்துறை, இந்து அறநிலையத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, பொதுப்பணித்துறை உட்பட அமைச்சர்கள் அடங்கிய ஆலோசனைக்கூட்டம் நடத்தியது.இக்கூட்டத்தில், பஞ்சலிங்க அருவியில் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பிற்காக பல்வேறு வசதிகளை மேம்படுத்த திட்டமிடப்பட்டது. ஆனால் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.பல ஆண்டுகளாகியும் பஞ்சலிங்க அருவி மேம்பாட்டு திட்டங்கள் எதுவும் இதுவரை நடைமுறைக்கு வரவில்லை.சுற்றுலா பயணிகள் உடை மாற்ற தேவையான அறைகள் இல்லை. கழிப்பிட வசதியும் இல்லாமல் சிரமப்பட்டு வருகின்றனர்.
இப்பிரச்சினைக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைத்து, பஞ்சலிங்க அருவி பாதுகாப்பான அருவி என்ற பெயரை நிலை நிறுத்த அனைத்து துறையினரை ஒருங்கிணைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்