என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
ரேசன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விற்பனை - உழவர் உழைப்பாளர் கட்சி வலியுறுத்தல்
- உழவாலயத்தில் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது
- உழவர் தின விழாவை சிறப்பாக நடத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
பல்லடம் :
பல்லடம் அருகே உள்ள காரணம்பேட்டையில் உழவர் உழைப்பாளர் கட்சி தலைமை அலுவலகம் உழவாலயத்தில் கட்சித் தலைவர் செல்லமுத்து தலைமையில் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.இதில் மாநில செயலாளர் சின்ன காளிபாளையம் ஈஸ்வரன், மாநில பொருளாளர் பாலசுப்ரமணியம், மாநில மகளிர் அணி செயலாளர் கே.சி.எம். சங்கீத பிரியா, ஊடக பிரிவு செயலாளர் ஈஸ்வரன்,இளைஞரணி செயலாளர் காடாம்பாடி கணேசன், திருப்பூர் மாவட்ட தலைவர் ஈஸ்வரமூர்த்தி, கோடங்கிபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் காவி.பழனிசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதில் வரும் ஜூலை 5ந்தேதி உழவர் தின விழாவை சிறப்பாக நடத்துவது. தமிழக அரசு ரேசன்கடைகளில், தேங்காய் எண்ணெய் விற்பனை செய்ய நடவடிக்கை வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இந்த கூட்டத்திற்கு பின் கட்சித் தலைவர் செல்லமுத்து செய்தியாளரிடம் கூறியதாவது:- திருப்பூர், கோவை மாவட்டங்களில் லட்சக்கணக்கான ஏக்கரில் தென்னை விவசாயம் நடைபெற்று வருகிறது. விவசாய தொழிலாளர்கள் பற்றாக்குறையால் இங்கு உள்ள பல விவசாயிகள் தென்னை விவசாயத்திற்கு மாறிவிட்டனர். இந்தநிலையில் தற்போது தேங்காய் விலை குறைந்துள்ளது.
உதாரணமாக கடந்த சில வாரங்களுக்கு முன் தேங்காய் ஒன்றின் விலை ரூ.13 முதல் ரூ. 14.50 வரை விலை கிடைத்தது. தற்போது தேங்காய் ஒன்றின் விலை ரூ.10 முதல் 11.50 வரை வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர். தென்னை விவசாயத்திற்கு பயன்படும் மருந்துகள், உரம், போன்றவைகள் கடுமையாக விலை அதிகரித்துள்ள நிலையில் தேங்காய் விலை குறைவால் தென்னை விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.
மேலும் ரேசன் கடைகளில் வழங்கப்படும் பாமாயில் இறக்குமதி செய்யப்பட்டு வழங்கப்படுகிறது. அதற்கு மாற்றாக தேங்காய் எண்ணெயை வினியோகிக்க அரசு முன்வர வேண்டும். மேலும் தென்னை விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் அரசு உரம், இடுபொருள்களுக்கு மானியம் வழங்க வேண்டும். தமிழ்நாடு அரசு விவசாயிகளிடமிருந்து இனாம் நிலங்களை கைப்பற்றுவதை விடுத்து அந்த நிலங்களை பண்படுத்தி பல வருடங்களாக கஷ்டப்பட்டு கடன் பட்டு, மலடாக இருந்த நிலத்தை ,விளை நிலமாக மாற்றிய விவசாயிகளுக்கு அவர்களது பெயரிலேயே பட்டா வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்