என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
முத்திரைத்தாள் தட்டுப்பாடு இ.ஸ்டாம்பிங் முறையை பயன்படுத்த வேண்டுகோள்
- தமிழகத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முத்திரைத்தாள் விற்கப்படுகிறது.
- இ-ஸ்டாம்பிங் என்ற மின்னணு முத்திரைதாள் கட்டணத்தை செலுத்தும் முறையும் அமலில் உள்ளது.
திருப்பூர் :
தமிழகத்தில் பதிவு துறையின் கீழ், 575 பத்திரப்பதிவு அலுவலகங்கள் செயல்படுகின்றன. பதிவுத்துறை அலுவலகத்தில் சொத்து கிரயம் செய்வதற்கு 5 ஆயிரம் முதல் 25 ஆயிரம் ரூபாய் ஆகிய மதிப்புள்ள முத்திரைத்தாள் பிரதானமாக பயன்படுத்தப்படுகிறது. தமிழகத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விற்பனையாளர்கள் (ஸ்டாம்ப் வெண்டர்) மூலம் முத்திரைத்தாள் விற்கப்படுகிறது.
கடந்த ஓராண்டாக கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, கரூர், நாமக்கல் உட்பட தமிழகத்தில் பல மாவட்டங்களில் மக்கள் அதிகம் பயன்படுத்தக்கூடிய 5 ஆயிரம் முதல், 25 ஆயிரம் மதிப்புள்ள முத்திரைதாள் வரை தட்டுப்பாடு அதிகரித்த வண்ணம் உள்ளது.பத்திரப்பதிவு முறைகளின் போது ஏற்படும் சிக்கல்களை தவிர்க்க, இ-ஸ்டாம்பிங் என்ற மின்னணு முத்திரைதாள் கட்டணத்தை செலுத்தும் முறையும் அமலில் உள்ளது. இந்த புதிய முறையை மக்கள் முழுமையாக பயன்படுத்த முன்வருவதில்லை. இதனால் முத்திரைத்தாளையே அதிகம் கேட்கின்றனர். அவர்களுக்கு, வழங்கும் அளவுக்கு இல்லாமல் தட்டுப்பாடு தொடர்கிறது.
இது குறித்து முத்திரைத்தாள் விற்பனையாளர் சங்க தலைவர் கூறுகையில், ஐந்தாயிரம் முதல் 25 ஆயிரம் ரூபாய் வரை உள்ள முத்திரைதாள் கடந்த சில மாதங்களாக விற்பனையாளர்களுக்கு வழங்குவதில்லை. சார்நிலை கருவூலத்தில் கேட்டால் நாசிக் நகரிலிருந்து வரவில்லை என்று கூறுகின்றனர். கோவை, திருப்பூர் மாவட்டங்களுக்கு அதிக மதிப்புள்ள முத்திரைதாள் தேவைப்படுகிறது. தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார்.
அதிகாரிகள் கூறுகையில், அதிக மதிப்புள்ள தொகைக்கான முத்திரை தாள்களின் தேவைக்கு ஏற்ப பிற மாவட்டங்களில் இருந்து பெறப்பட்டு மாவட்டம் வாரியாக பிரித்து அனுப்பி வைக்கப்படுகிறது. ரூபாய், 10 முதல் 5 ஆயிரம் மதிப்புள்ள வரை முத்திரை தாள் கிடைக்கிறது. அதிக மதிப்புள்ள தொகைக்கான முத்திரை தாள் சென்னையில் இருந்து வருவதில்லை. எந்த பகுதியில் தேவைப்படுகிறது என்பது குறித்து விசாரிக்கிறோம் .முத்திரை தாள் இல்லையென்றாலும் கூட, குறைந்த மதிப்பிலான முத்திரை தாளை முதல்பக்கத்தில் மட்டும் வைத்து விட்டு மீதமுள்ள தொகைக்கு ஆன் லைன் மூலம் செலுத்தலாம். இ-ஸ்டாம்பிங் முறையை மக்கள் தாராளமாக பயன்படுத்தலாம் என்றார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்