search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அஞ்சல் துறை மூலமாக ஆதிதிராவிட மாணவர்கள் வங்கிக்கணக்கு தொடங்க எளிய வசதி
    X

    கோப்புபடம்.

    அஞ்சல் துறை மூலமாக ஆதிதிராவிட மாணவர்கள் வங்கிக்கணக்கு தொடங்க எளிய வசதி

    • இந்திய போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கிக்கணக்கு தொடங்கப்பட்டுள்ளது.
    • தபால்காரர்கள், கிராம அஞ்சல் ஊழியரை தொடர்பு கொண்டு வங்கிக்கணக்கு தொடங்கலாம்.

    திருப்பூர் :

    ஆதிதிராவிடர் நலத்துறையின் கல்வி உதவித்தொகை பெற வசதியாக அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் இந்திய போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியுடன் இணைந்து அந்தந்த பள்ளிகளிலேயே மாணவர்களுக்கு ஆதார் இணைப்புடன் கூடிய வங்கிக்கணக்கு தொடங்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    திருப்பூர் மாவட்டத்தில் 9 ஆயிரத்து 302 மாணவர்களுக்கு ஆதார் இணைப்புடன் கூடிய வங்கி கணக்கு இல்லாமல் இருந்தது. கடந்த 10 நாட்களாக பள்ளிகளில் நடந்தப்பட்ட சிறப்பு முகாம்கள் மூலமாக 2 ஆயிரத்து 157 மாணவர்களுக்கு இந்திய போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கிக்கணக்கு தொடங்கப்பட்டுள்ளது. மீதம் உள்ள 7 ஆயிரத்து 145 மாணவர்களுக்கு வருகிற 25-ந் தேதிக்குள் ஆதார் இணைப்புடன் கூடிய வங்கிக்கணக்கு தொடங்கப்பட வேண்டும்.

    பள்ளிகளில் நடக்கும் சிறப்பு முகாம்கள் மட்டுமில்லாமல் அருகில் உள்ள தபால் நிலையங்கள், தபால்காரர்கள், கிராம அஞ்சல் ஊழியரை தொடர்பு கொண்டு வங்கிக்கணக்கு தொடங்கலாம். தபால்காரர்கள், கிராம அஞ்சல் ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஸ்மார்ட் போன் மற்றும் பயோமெட்ரிக் சாதனத்தின் மூலமாக மாணவர்களின் ஆதார் எண், செல்போன் எண்ணை பயன்படுத்தி விரல் ரேகை மூலம் வங்கிக்கணக்கு தொடங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×