என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பல்லடத்தில் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்கும் சிறப்பு முகாம் - தாசில்தார் ஆய்வு
    X

    முகாமை தாசில்தார் நந்தகோபால் பார்வையிட்ட காட்சி.

    பல்லடத்தில் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்கும் சிறப்பு முகாம் - தாசில்தார் ஆய்வு

    • பல்லடம் சட்டமன்றத் தொகுதியில் மொத்தம் 410 வாக்குச்சாவடிகள் உள்ளன.
    • 31.3.2023-க்குள் இந்த பணியை முடிக்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டு உள்ளது.

    பல்லடம் :

    இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலை 100 சதவீதம் தூய்மையாக்கவும், போலி வாக்காளர்களை ஒழிக்கவும் வாக்காளர் பட்டியலுடன் வாக்காளர்களின் ஆதார் எண்ணை இணைக்கும் பணியை கடந்த 1.8.2022 முதல் தொடங்கி உள்ளது. வரும் 31.3.2023-க்குள் இந்த பணியை முடிக்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டு உள்ளது.

    கடந்த ஒரு மாதமாக ஏராளமான வாக்காளர்கள் ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலுடன் இணைத்து வருகின்றனர்.இதன்படி பல்லடம் சட்டமன்றத் தொகுதியில் மொத்தம் 410 வாக்குச்சாவடிகள் உள்ளன. இந்த வாக்குச்சாவடிகளில் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான சிறப்பு முகாம் கடந்த 2 நாட்களாக நடைபெற்றது. பல்லடம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடி மற்றும் பச்சாபாளையம் அரசு நடுநிலை பள்ளி வாக்கு சாவடிகளில் நடந்த சிறப்பு முகாமை தாசில்தார் நந்த கோபால் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    Next Story
    ×