என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.
திருப்பூர் வழியாக ராஜஸ்தானுக்கு சிறப்பு ரெயில்
- சென்னை எழும்பூரில இருந்து சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை வழியாக ஜோத்பூருக்கு சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது
- ஏப்ரல் 30 மற்றும் மே 7ந் தேதி ஜோத்பூரில் இருந்து எழும்பூர் வந்து சேரும்.
திருப்பூர் :
பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்க சென்னை எழும்பூரில இருந்து சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை வழியாக ஜோத்பூருக்கு சிறப்பு ரெயில் (எண்:06056) இயக்கப்பட உள்ளது.நேற்று மற்றும் மே 4ந் தேதி சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும் ரெயில், பெரம்பூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை ரெயில் நிலையங்களில் நின்று கேரள மாநிலம் பாலக்காடு, காசர்கோடு வழியாக மங்களூரு சென்றடையும். அங்கிருந்து ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் செல்லும். மறுமார்க்கமாக ஏப்ரல் 30 மற்றும் மே 7ந் தேதி ஜோத்பூரில் இருந்து எழும்பூர் வந்து சேரும்.
வழக்கமாக வடமாநிலங்களுக்கு சிறப்பு ரெயில் சென்னையில் இருந்து இயக்கப்படும். ஆந்திரா வழியாக பயணிக்கும். ஆனால் இந்த ரெயில் தமிழகத்தின் மேற்கு மாவட்டங்கள் வழியாக பயணித்து ராஜஸ்தான் செல்கிறது.
Next Story






