search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பல்லடத்தில் ஜவுளி பூங்கா - விசைத்தறியாளர்கள் எதிர்பார்ப்பு
    X

    கோப்புபடம்.

    பல்லடத்தில் ஜவுளி பூங்கா - விசைத்தறியாளர்கள் எதிர்பார்ப்பு

    • திருப்பூர், கோவை மாவட்டங்களில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகள் உள்ளன.
    • முதல்வர் மு.க. ஸ்டாலின், கொங்கு மண்டலத்தில் ஜவுளி பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியிருந்தார்.

    திருப்பூர் :

    திருப்பூர், கோவை மாவட்டங்களில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகள் உள்ளன. இவற்றில் பல்லடம், சோமனூர் பகுதிகளில் அதிகப்படியான விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. விசைத்தறி தொழிலை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்ல பல்லடம் பகுதியில் ஜவுளி பூங்கா அமைக்க வேண்டும் என விசைத்தறியாளர்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    இதுகுறித்து திருப்பூர், கோவை மாவட்ட விசைத்தறி உரிமையாளர் சங்க செயலாளர் பாலசுப்பிரமணியம் கூறியதாவது:- விசைத்தறி தொழில் மேலும் வளர்ச்சி பெற, பல்லடத்தை மையமாகக் கொண்டு ஜவுளி பூங்கா அமைக்க வேண்டும் என கடந்த 2017 முதல் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறோம். அரசே நிலம் அளித்து, அதில் ஜவுளி பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளோம். ஆனால் இன்று வரை திட்டம் கிடப்பில் உள்ளது.

    சமீபத்தில் கோவை வந்த முதல்வர் மு.க. ஸ்டாலின், கொங்கு மண்டலத்தில் ஜவுளி பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியிருந்தார். எங்களது பல நாள் கோரிக்கையின்படி பல்லடத்தில் ஜவுளி சந்தை அமைத்து தர வேண்டும். இதனால் நெசவாளர்கள் சொந்த விசைத்தறியாளர்களாக மாற வாய்ப்பு உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×