என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![அலங்கியம் நெல் கொள்முதல் நிலையத்தில் சுமை தூக்கும் தொழிலாளர்களிடம் லஞ்சம் கேட்ட அதிகாரி பணியிட மாற்றம் அலங்கியம் நெல் கொள்முதல் நிலையத்தில் சுமை தூக்கும் தொழிலாளர்களிடம் லஞ்சம் கேட்ட அதிகாரி பணியிட மாற்றம்](https://media.maalaimalar.com/h-upload/2023/03/30/1857530-untitled-1.webp)
கோப்புபடம்.
அலங்கியம் நெல் கொள்முதல் நிலையத்தில் சுமை தூக்கும் தொழிலாளர்களிடம் லஞ்சம் கேட்ட அதிகாரி பணியிட மாற்றம்
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- 25-க்கும் மேற்பட்ட சுமை தூக்கும் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
- நெல் மூட்டை ஒன்றுக்கு ரூ.15 வீதம் ஏற்றுக் கூலியாக கொடுத்து வருகின்றனர்.
தாராபுரம் :
தாராபுரம் அலங்கியத்தில் அரசு நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையத்துக்கு விவசாயிகள் கொண்டு வரும் நெல் மூட்டைகளை லாரியில் ஏற்றுவதற்கு 25-க்கும் மேற்பட்ட சுமை தூக்கும் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வரும் நெல் மூட்டை ஒன்றுக்கு ரூ.15 வீதம் ஏற்றுக் கூலியாக கொடுத்து வருகின்றனர். ஆனால் அங்கு பணிபுரிந்து வந்த கொள்முதல் நிலைய அதிகாரி ஏழுமலை என்பவர் சுமை தூக்கும் தொழிலாளர்களிடம் விவசாயிகளிடம் நீங்கள் வாங்கும் ரூ.15 உடன் எங்களுக்கும் சேர்த்து கூடுதலாக ரூ.10 வாங்கி தர வேண்டும் என சுமை தூக்கும் தொழிலாளி ஒருவரிடம் செல்போனில் லஞ்சம் கேட்டு பேசியதாக தெரிகிறது.
இவ்வாறு அவர் பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வந்தது. இதனையடுத்து மாவட்ட நெல் கொள்முதல் நிலைய அதிகாரி அலங்கியம் நெல் கொள்முதல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த அதிகாரி ஏழுமலை என்பவரை அதிரடியாக பணியிட மாற்றம் செய்தார். அதற்கு பதிலாக புதிய அலுவலராக இளவரசன் என்பவரை அதிரடியாக அலங்கியம் நெல் கொள்முதல் நிலையத்துக்கு நியமிக்கப்பட்டார்.