என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
திருப்பூரில் ஆதரவற்றவர்களை மீட்டு காப்பகங்களில் ஒப்படைத்த போலீசார்
- தன்னார்வ தொண்டு அமைப்பினர் உதவியுடன் மாநகரில் மட்டும் 50க்கும் மேற்பட்ட ஆதரவற்றோரை போலீசார் மீட்டனர்.
- திருப்பூர் மற்றும் கோவை மாவட்டங்களில் உள்ள காப்பகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
திருப்பூர் :
தமிழகம் முழுவதும் கோவில்கள் முன்பும், சாலைகளில் ஆங்காங்கே இருக்கும் ஆதரவற்றவர்களை மீட்டு காப்பகங்களில் ஒப்படைக்குமாறு தமிழக டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். இதன் பேரில் திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் பிரபாகரன் அறிவுறுத்தலின்பேரில், திருப்பூர் குமரன் சாலை,ரெயில் நிலையம், பழைய பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களிலும் , அதே போல் கோவில்கள் முன்பும், கோவில்களை சுற்றியுள்ள சாலைகளிலும், சாலையோரம் வசித்து வந்த ஆதரவற்றவர்களை தன்னார்வ தொண்டு அமைப்பினர் உதவியுடன் மாநகரில் மட்டும் 50க்கும் மேற்பட்ட ஆதரவற்றோரை போலீசார் மீட்டனர்.
இப்பணிக்காக போலீசார் வந்தபோது அவர்களை பார்த்ததும் கோவில்கள் முன்பு இருந்தவர்கள் ஓட முயற்சித்தனர். அவர்களை பிடித்து அறிவுரைகள் கூறி வாகனத்தில் ஏற்றினர்.
பின்னர் அவர்களைஆம்புலன்சுகள் மூலமாக திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்து சென்று அவர்களுக்கு தேவையான மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து அவர்கள் திருப்பூர் மற்றும் கோவை மாவட்டங்களில் உள்ள காப்பகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.