என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
14 ஆயிரம் தெரு விளக்குகள் பொருத்தும் பணி நாளை தொடக்கம் - மாமன்ற கூட்டத்தில் மேயர் தகவல்
- 352 கிலோமீட்டர் தூரத்திற்கு குடிநீர் இணைப்பு விடுபட்டு உள்ளது தெரிய வந்துள்ளது.
- ரூ.99 கோடியே 80 லட்சம் மதிப்பில் சீரமைப்பு பணிகள் தொடங்கப்பட உள்ளது.
திருப்பூர் :
திருப்பூர் மாநகராட்சி அவசர கூட்டம் இன்று காலை மேயர் தினேஷ் குமார் தலைமையில் நடந்தது. கூட்டத்திற்கு கமிஷனர் பவன் குமார், துணை மேயர் பாலசுப்ரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் மேயர் தினேஷ்குமார் பேசியதாவது:- திருப்பூர் மாநகராட்சி பகுதியில் பல ஆண்டுகளாக இருந்து வந்த தெரு விளக்கு பிரச்சினைக்கு தீர்வு காணும் விதமாக முதல் கட்டமாக 3 மற்றும் 4 வது மண்டலத்துக்குட்பட்ட பகுதிகளில் 4755 தெரு விளக்குகளுக்கு டெண்டர் விடப்பட்டு பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது.அதேபோல் 1 மற்றும் 2-வது மண்டலம் உட்பட்ட பகுதிகளில் 4,238 தெரு விளக்குகளுக்கும் பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது.
அதேபோல் மின் சிக்கனத்தை கடைபிடிக்கும் வகையில் சோடியம் விளக்குகளுக்கு பதிலாக எல்இடி., விளக்குகள் பொருத்தும் பணிக்கான ஆணை வழங்கப்பட்டுள்ளது.இந்தப் பணிகள் அனைத்தும் நாளை தொடங்கப்பட உள்ளது.மாநகர் முழுவதும் சுமார் 14,000 தெரு விளக்குகள் பொருத்தப்பட உள்ளது.
இதே போல் குடிநீர் பிரச்சினையை தீர்க்கும் வகையில் நான்காவது கூட்டு குடிநீர் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. மாநகராட்சி பகுதிகளில் எடுக்கப்பட்ட பிரத்யேக ஆய்வில் 352 கிலோமீட்டர் தூரத்திற்கு வீடுகள்இ வணிக வளங்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு குழாய்கள் பதிப்பது மற்றும் குடிநீர் இணைப்பு வழங்குவது விடுபட்டு உள்ளது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து ரூ.56 கோடி மதிப்பில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு ஜூன் இறுதிக்கு முன்பாக இந்த பணிகள் தொடங்கப்படும்.மாநகர் முழுவதும் பழுதடைந்த சாலைகளை சீரமைக்க ரூ.99 கோடியே 80 லட்சம் மதிப்பில் சீரமைப்பு பணிகள் தொடங்கப்பட உள்ளது.
மாநகர் பகுதிகளில் பாதாள திட்டப்பணிகள் 89 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளது. பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது. கோடை காலத்தில் குடிநீர் பிரச்சினை இல்லாத வகையில் நான்கு நாட்களுக்கு ஒரு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்திலேயே நமக்கு நாமே திட்டத்தில் அதிக நிதியை திருப்பூர் மாநகராட்சி பெற்றுள்ளது தற்போது ரூ.1கோடியே 80 லட்சம் மதிப்பில் பணிகள் நடந்து வருகிறது. மழைநீர் பிரச்சனைக்கு தீர்வாக தண்ணீர் தேங்கும் இடங்களில் சீரமைப்பு பணிகள் தொடங்கப்பட்டது என்றார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்