search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிறப்பு முகாம்  செல்போன் செயலி மூலம் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கை-திருத்தம் செய்யலாம்
    X
    கோப்புபடம்.

    சிறப்பு முகாம் செல்போன் செயலி மூலம் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கை-திருத்தம் செய்யலாம்

    • வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தம் செய்வது தொடர்பாக சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
    • வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான படிவம்-6 -யை பூர்த்தி செய்து முன்னதாகவே அளிக்கலாம்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- 1.1.2023-நாளினை தகுதி ஏற்படுத்தும் நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியலில் சிறப்பு சுருக்க முறை திருத்தம் 2023 மேற்கொள்ள இந்திய தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்ட காலஅட்டவணைப்படி 26.11.2022 (சனிக்கிழமை), 27.11.2022 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய நாட்களில்திருப்பூர் மாவட்டத்திற்குட்பட்ட 8 சட்டமன்றத் தொகுதிகளிலும் உள்ள அனைத்து நிர்ணயிக்கப்பட்ட வாக்குச்சாவடி மையங்களிலும் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தம் செய்வது தொடர்பாக சிறப்பு முகாம் நடைபெற உள்ளது

    மேலும், எதிர்வரும் சிறப்பு முகாம் நாட்களில் ஜனவரி 1ந் தேதியன்று 18 வயது பூர்த்தியடையும் வாக்காளர்களும் மற்றும் அடுத்த ஆண்டு அதாவது 2023 ஆண்டின் ஏப்ரல் 1ந் தேதி, ஜூலை 1ந் தேதி, அக்டோபர் 1-ந் தேதி 18 வயது பூர்த்தியடையும் வாக்காளர்களும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான படிவம்-6 -யை பூர்த்தி செய்து முன்னதாகவே அளிக்கலாம். மேற்படி முன்னதாக வரப்பெற்ற படிவங்கள் (அடுத்தாண்டில் தகுதி நாள் அடையும்) சேகரிக்கப்பட்டு அவை அந்தந்த காலாண்டின் துவக்கத்தில் (ஏப்ரல், ஜூலை, அக்டோபர்) வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படும்.

    சிறப்பு முகாம் நாளன்று, வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெறாதவர்கள், வாக்காளர் பட்டியலில் உள்ள பதிவுகளில் திருத்தம் செய்ய விரும்புவோர், பெயர் நீக்கம் செய்ய விரும்புவோர் மற்றும் ஒரே தொகுதிக்குள் குடியிருப்பு மாறியவர்கள், முகவரி மாற்றம் செய்வது போன்ற கோரிக்கைகள் தொடர்பாக, கீழ்க்கண்ட படிவங்களில் உரிய ஆவணங்களை இணைத்து வாக்குச்சாவடி மையங்களில் விண்ணப்பிக்கவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்கபடிவம் 6,வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைக்கபடிவம் 6B,வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம் செய்யபடிவம் 7,ஒரே சட்டமன்ற தொகுதிக்குள் முகவரி மாற்றம் செய்ய /ஒரு சட்டமன்ற தொகுதியிலிருந்து மற்றொரு சட்டமன்ற தொகுதிக்கு முகவரி மாற்றம் செய்ய மற்றும் வாக்காளர் பட்டியலில் உள்ளபடிவம் 8 விபரங்களை திருத்தம் செய்யபொதுமக்கள் Www.nvsp.in என்ற இணையதளம்மூலமாகவும், Voter HelplineApp என்ற மொபைல் செயலி மூலமாகவும் விண்ணப்பிக்கலாம் . இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×