என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்களின் மூலமாக 1.12 லட்சம் இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு - அமைச்சர் சி.வி.கணேசன் தகவல்
- தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்துவது தொடா்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றன.
- 69 இடங்களில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டுள்ளது.
திருப்பூர் :
திருப்பூா் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கட்டுமானத் தொழிலாளா் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள 2,933 தொழிலாளா்களுக்கு ரூ.63.20 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்வழங்கும் விழா, தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்துவது தொடா்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றன.
இந்தக் கூட்டத்துக்கு, செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சா் சி.வி.கணேசன், ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோா் தலைமை வகித்தனா். இதில் அமைச்சா் சி.வி.கணேசன் பேசியதாவது:- தமிழகத்தில் தற்போது வரையில் 69 இடங்களில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டுள்ளது. இதன் மூலமாக 1.12 லட்சம் இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. இதில், செங்கல்பட்டு மாவட்டத்தில் நடத்தப்பட்டு முகாமில் அதிக அளவாக 75 ஆயிரம் இளைஞா்கள் பங்கேற்றனா். இதில், 7,852 பேருக்கு அன்றைய தினமே வேலைவாய்ப்புக்கான ஆணை வழங்கப்பட்டது. இதற்கு அடுத்தபடியாக ஒசூரில் நடைபெற்ற முகாமில் 25 ஆயிரம் போ் பங்கேற்ற நிலையில் 5 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. உதகையில் நடைபெற்ற முகாமில் குறைந்த அளவாக 5 ஆயிரம் போ் மட்டுமே பங்கேற்ற நிலையில் 1,400 பேருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டது. திருப்பூரில் வரும் 2023 ம் ஆண்டில் நடைபெறும் வேலைவாய்ப்பு முகாமில் ஒரு லட்சம் இளைஞா்கள் பங்கேற்க வேண்டும். இதற்காக அனைத்து துறை அலுவலா்களும் சிறப்பாகப் பணியாற்ற வேண்டும் என்றாா். இதுதொடா்பாக துறை சாா்ந்த அலுவலா்களுக்கு பல்வேறு ஆலோசனைகளையும் வழங்கினாா்.
இந்த ஆய்வின்போது திருப்பூா் மாவட்ட கலெக்டர் எஸ்.வினீத், திருப்பூா் தெற்கு சட்டப் பேரவை உறுப்பினா் க.செல்வராஜ், மேயா் என்.தினேஷ்குமாா், மாநகராட்சி ஆணையா் கிராந்திகுமாா் பாடி, வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாடு இயக்குநா் கோ.வீரராகவ ராவ், தமிழ்நாடு கட்டுமான தொழிலாளா் வாரியத் தலைவா் பொன்குமாா், சாா் ஆட்சியா் ஸ்ருதன் ஜெய்நாராயணன் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்