என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
திருப்பூர் காந்திநகர் ஏ.வி.பி.,பள்ளியில் ஆசிரியர்களுக்கு கலை ஒருங்கிணைப்பு குறித்து பயிற்சி
- பாடத்துடன் கலையை ஒருங்கிணைப்பது தொடர்பான ஒருநாள்பயிற்சி வகுப்பு நடைபெற்றது.
- 60க்கும் அதிகமான ஆசிரியர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்
திருப்பூர் :
திருப்பூர் காந்திநகர் ஏ.வி.பி. டிரஸ்ட் பப்ளிக் சீனியர் செகண்டரிபள்ளியில் ஆசிரியர்களுக்கு பாடத்துடன் கலையை ஒருங்கிணைப்பது தொடர்பான ஒருநாள்பயிற்சி வகுப்பு நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு சி.பி.எஸ்.இ.யின் முதன்மை பயிற்சியாளர் பரமகல்யாணி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஆசிரியர்களுக்கு பாடத்துடன் கலையை இணைத்து மாணவர்களுக்கு கற்றலை கொண்டு செல்வது என்பது தொடர்பான பயிற்சி வகுப்புகளை நடத்தினார். சுமார் 60க்கும் அதிகமான ஆசிரியர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். கலந்து கொண்டஆசிரியர்களுக்கு சி.பி.எஸ்.இ.யின் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
பள்ளியின் கலையரங்கில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு ஏ.வி.பி.கல்வி குழுமங்களின்தாளாளர் கார்த்திகேயன் அருள்ஜோதி தலைமை தாங்கி தலைமையுரையாற்றினார். பொருளாளர் லதா கார்த்திகேயன் முன்னிலை வகித்தார்.பள்ளி முதல்வர் பிரமோதனி வரவேற்றார். முடிவில் பள்ளி ஆசிரியை ரஞ்சிதா நன்றி கூறினார்.நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் பள்ளி ஒருங்கிணைப்பாளர் மோகனா மற்றும் நித்யா ஆகியோர் செய்திருந்தனர்.