என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
உடுமலையில் சுவர் ஓவியம் மூலம் கவரும் நகராட்சி நடுநிலைப்பள்ளி
- மாணவர்கள் மகிழ்ச்சியான மனநிலையில் வருவதற்கு சுவற்றில் வண்ண ஓவியங்கள் மாணவர்கள் மூலமாக தீட்டப்பட்டுள்ளது.
- இயற்கை காட்சி மற்றும் விவசாயத்தின் அவசியம், மழை வளம் காக்க மரம் நடுவதன் அவசியம், தொழிற்சாலைகள் , மலைகள் குறித்த படங்களை வரைந்து உள்ளனர்.
உடுமலை :
உடுமலை நகராட்சிக்குட்பட்ட பழனியாண்டவர் நகர் நகரில் நடுநிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு தமிழ் மற்றும் ஆங்கில வழி கல்வி கற்பிக்கப்படுகிறது.
மாணவர்கள் மகிழ்ச்சியான மனநிலையில் இருப்பதற்கும் பள்ளி வருவதற்கு தயங்காமல் இருப்பதற்கும் சுவற்றில் வண்ண ஓவியங்கள் மாணவர்கள் மூலமாக தீட்டப்பட்டுள்ளது. மாணவர்களே தங்கள் முயற்சியால் தலைமையாசிரியர் மற்றும் வகுப்பு ஆசிரியர்கள் வழிகாட்டுதலுடன் இந்த சுவர் ஓவியங்களை வரைந்து உள்ளனர். இயற்கை காட்சி மற்றும் விவசாயத்தின் அவசியம், மழை வளம் காக்க மரம் நடுவதன் அவசியம், தொழிற்சாலைகள் , மலைகள் குறித்த படங்களை வரைந்து உள்ளனர். இதனால் மாணவர்களுக்கு ஓவியத்தின் மீது ஆர்வம் அதிகரித்து வருகிறது. ஓவியம் வரைவதால் மாணவர்கள் மனநிலையும் ஒருநிலைப்படும். இதனால் மாணவர்கள் மகிழ்ச்சியுடன் பள்ளிக்கு வருவதாக பள்ளி தலைமை ஆசிரியர் இரா. சண்முகப்பிரியா தெரிவித்தார்.
மேலும் பெற்றோர்கள் ,தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்களின் இந்த முயற்சிக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்.