என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
அவினாசியில் விதவிதமான சிலைகள் விற்பனை
- பல்வேறு வடிவங்களில் தத்ரூபமான வினாயகர் சிலை தயாரிக்கப்பட்டு வருகிறது
- 1 அடி முதல் 15 அடி வரை பல்வேறு வடிவங்களில் வினாயகர் சிலை தயாரித்து, கண்கவர் வண்ணம் தீட்டப்படுகிறது.
அவினாசி :
அவினாசியை அடுத்து காசி கவுண்டன்புதூரில் கடந்த ஒரு மாதமாக பல்வேறு வடிவங்களில் தத்ரூபமான வினாயகர் சிலை தயாரிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து சிற்பி ஆனந்தகுமார் கூறுகையில்,ஆண்டுதோறும் நடைபெறும் வினாயகர் சதுர்த்தி நிகழ்ச்சிக்காக கடந்த 15 ஆண்டுகளாக வினாயகர் சிலைகளை வடிவமைத்து வருகிறோம்.
கடந்த ஒரு மாதமாக எனது தலைமையில் 10 பேர் கொண்ட குழுவினர்கல் மாவு, பேப்பர் மாவு, கிழங்கு மாவு ஆகிய மூன்று கலவைகள் மூலம் 1 அடிமுதல் 15 அடிவரை கற்பக வினாயகர், தாமரை வினாயகர், யானைமுக வினாயகர், காளிமுகம், சிங்கமுகம், மயில்வாகனம், கருடவாகனம், ராஜ அலங்கார வினாயகர் முகம், உள்ளிட்ட பல்வேறு வடிவங்களில் வினாயகர் சிலை தயாரித்து அதற்கு ஏற்றார்போல் கண்கவர் வண்ணம் தீட்டப்படுகிறது. இவ்வாறு தயாரிக்கப்பட்ட வினாயகர் சிலைகள் அவினாசி, அன்னூர், கருவலூர், கோபி நம்பியூர், சத்தியமங்கலம், புளியம்பட்டி, பல்லடம், உடுமலை, தாராபுரம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு அனுப்பிவைக்கப்படுகிறது என்று கூறினார்.