search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உத்தமர் காந்தி விருதுகள் பெற கிராம ஊராட்சி தலைவர்கள் விண்ணப்பிக்கலாம்
    X

    கோப்புபடம்.

    உத்தமர் காந்தி விருதுகள் பெற கிராம ஊராட்சி தலைவர்கள் விண்ணப்பிக்கலாம்

    • ரூ.3.70 கோடி ரூபாய் செலவில் உத்தமர் காந்தி விருதுகள் வழங்கப்பட உள்ளது.
    • http:/tnrd.tn.gov.in/ என்கிற இணையதளத்தின் மூலம் விருதுக்கு விண்ணப்பித்திடும் வகையிலும் படிவம் ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டத்தில் கிராம ஊராட்சிகளில் சிறந்த நிர்வாகத்தினை ஏற்படுத்திடும் வகையில் உத்தமர் காந்தி விருது பெறுவதற்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. மாவட்டத்திற்கு ஒன்று வீதம் சிறந்த 37 கிராம ஊராட்சிகளுக்கு ரூ.10 லட்சம் வீதம் ரூ.3.70 கோடி ரூபாய் செலவில் உத்தமர் காந்தி விருதுகள் வழங்கப்பட உள்ளது.

    அதன்படி, திருப்பூர் மாவட்டத்தில் கிராம ஊராட்சிகளில் சிறந்த நிர்வாகத்தினை ஏற்படுத்திடும் வகையிலும், புதுமையான முயற்சிகள் எடுத்து மிகச் சிறப்பாக பணியாற்றியுள்ள கிராம ஊராட்சித் தலைவர்களை ஊக்குவிக்கும் பொருட்டும், நீடித்த மற்றும் நிலைத்த வளர்ச்சி இலக்குகளை அடையும் கிராம ஊராட்சிகளை ஊக்கப்படுத்தும் வகையில் http:/tnrd.tn.gov.in/ என்கிற அரசின் இணையதளத்தின் மூலம் விருதுக்கு விண்ணப்பித்திடும் வகையிலும் படிவம் ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    மேலும், பின்வருமாறு புதிய வழிகாட்டு நெறிமுறைகளை பொதுமக்கள் மற்றும் கிராம ஊராட்சி மன்றத் தலைவர்கள் அறியும் வண்ணம் வெளியிடப்பட்டுள்ளது.அதன்படி http:/tnrd.tn.gov.in/ முகவரியை தேர்வு செய்யவும். மேற்படி இணையதளத்திலுள்ள கிராம ஊராட்சிகளுக்கு வழங்கப்பட்டுள்ள பயனர் முகவரி மற்றும் கடவுச் சொல்லை பயன்படுத்தி உள்நுழையவும். மேற்படி பயனரின் முகவரியில் அறிக்கை எண்.12-ஐ தேர்ந்ெதடுக்கவும். அதன் அடிப்படையில் அரசாணையில் உள்ள அனைத்து தேர்வு காரணிகளும் அடங்கிய உள்ளீடு செய்திடும் படிவம் இருக்கும். அப்படிவத்தினை முறையே பதிவு செய்து Save பொத்தானை அழுத்திசேமிக்க வேண்டும். இத்தகவலை கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×