search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புதிதாக எல்.இ.டி., விளக்குகள் வாங்க கிராம ஊராட்சிகளுக்கு தடை
    X

    கோப்புபடம்.

    புதிதாக எல்.இ.டி., விளக்குகள் வாங்க கிராம ஊராட்சிகளுக்கு தடை

    • உடுமலை ஒன்றியத்திற்கு உட்பட்ட 38 ஊராட்சிகளில் 13,884 தெருவிளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
    • புதிய பல்பு கடைகளில் வாங்கக்கூடாது என மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

    உடுமலை :

    மின் பயன்பாட்டை குறைக்க மாநிலம் முழுவதும் கிராம ஊராட்சிகளில் எல்.இ.டி., விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது.அவ்வகையில் உடுமலை ஒன்றியத்திற்கு உட்பட்ட 38 ஊராட்சிகளில் 12,008 எல்.இ.டி., 1,200 சி.எப்.எல்., 627 டியூப் லைட், 36 சோலார், 1 சோடியம், 1 மெர்குரி, 11 ைஹமாஸ் என13,884 தெருவிளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன.ஏதேனும் பாதிப்பு அல்லது பழுது ஏற்பட்டால் அவைகள் புதிதாக மாற்றப்படுகின்றன. இதற்கான உதிரிபாகங்களும், ஊராட்சி நிதியில் இருந்து கொள்முதல் செய்யப்படுகிறது.இந்நிலையில் ஊராட்சிகளில் எல்.இ.டி., விளக்குகள் பழுதானால் அதற்குரிய புதிய பல்பு கடைகளில் வாங்கக்கூடாது என மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

    இது குறித்து ஒன்றிய அதிகாரிகள் கூறியதாவது:-

    கிராம ஊராட்சிகள் புதிதாக எல்.இ.டி., விளக்குகள் வாங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கான, ஒப்புதல் கடிதமும் அந்தந்த ஊராட்சிகளில் இருந்தும் பெறப்பட்டுள்ளது.உடுமலை ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சிகள் மட்டுமின்றி மாவட்டத்தின் அனைத்து ஊராட்சிகளிலும் இந்த தடை உள்ளது.இதனால், கிராமங்களில் விளக்குகள் பழுதானால் சீரமைக்கும் வரை அப்பகுதி இருள் சூழந்தே காணப்படும். அரசின் இந்த உத்தரவு அதிகாரிகளை குழப்பம் அடையச்செய்துள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

    Next Story
    ×