என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.
சாலையில் சுற்றித்திரிந்த முதியோரை காப்பகத்தில் சேர்த்த தன்னார்வு அமைப்பினர்
- 85 வயது மதிக்கத்தக்க ஒரு ஆண் சுற்றி திரிந்து பிச்சை எடுத்து சாப்பிட்டுக்கொண்டு வந்துள்ளார்.
- பல்லடத்தில் உள்ள ஒரு தனியார் காப்பகத்தில் கொண்டு போய் சேர்த்தனர்.
வெள்ளகோவில் :
முத்தூர் நகர் பகுதியில் சுமார் 85 வயது மதிக்கத்தக்க ஒரு ஆண் சுற்றி திரிந்து பிச்சை எடுத்து சாப்பிட்டுக்கொண்டு வந்துள்ளார்.
இது குறித்த தகவல் அறிந்த நண்பர்கள் ரத்ததான அறக்கட்டளை, மனிதம் அறக்கட்டளை மற்றும் வெள்ளகோவில் தனியார் ஆம்புலன்ஸ் தன்னார்வ அமைப்பினர் முதியவரை மீட்டு முகசவரம் செய்து, குளிக்க வைத்து நல்ல உடை உடுத்தி பல்லடத்தில் உள்ள ஒரு தனியார் காப்பகத்தில் கொண்டு போய் சேர்த்தனர். முதியவர் ரூ.47 ஆயிரத்து 250 பணம் வைத்திருந்ததாகவும் பணத்துடன் கொண்டு சென்று சேர்த்துள்ளதாகவும் நண்பர்கள் ரத்ததான குழுவை சேர்ந்த பாலு கூறினார்.
Next Story






