search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சூடுபிடிக்கும் கிறிஸ்துமஸ் பண்டிகை பொருட்கள் விற்பனை
    X

    சூடுபிடிக்கும் கிறிஸ்துமஸ் பண்டிகை பொருட்கள் விற்பனை

    • ஏசு கிறிஸ்துவின் பிறப்பை சித்தரிக்கும் வகையில் குடில்கள் மற்றும் கிறிஸ்துமஸ் மரங்கள் அமைத்து பிரார்த்தனையில் ஈடுபடுவர்.
    • பண்டிகை கொண்டாடும் கிறிஸ்தவர்கள் குடும்பத்தாருடன் கடைகளில் இப்பொருட்களை தேர்வு செய்து வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    திருப்பூர் :

    கிறிஸ்துமஸ் பண்டிகை வருகிற 25ந் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த நாளை கிறிஸ்தவர்கள் தங்கள் வீடுகளிலும், ஆலயங்களிலும் சிறப்பாக கொண்டாடுவர்.பண்டிகையை முன்னிட்டு வீடுகள் மற்றும் கட்டடங்களில் ஏசுநாதரின் பிறப்பை கொண்டாடும் வகையில் கிறிஸ்துமஸ் ஸ்டார்கள் தொங்க விடப்படும். மேலும் ஏசு கிறிஸ்துவின் பிறப்பை சித்தரிக்கும் வகையில் குடில்கள் மற்றும் கிறிஸ்துமஸ் மரங்கள் அமைத்து பிரார்த்தனையில் ஈடுபடுவர்.

    இதற்கான கிறிஸ்துமஸ் ஸ்டார்கள், கிறிஸ்துமஸ் மரங்கள், மாட்டுத் தொழுவம், குடில்கள், குழந்தை ஏசு, தாய் மரியன்னை, கிறிஸ்துமஸ் மரத்துண்டு, பரிசு பொருட்கள் என வாங்கி வீடுகள், ஆலயங்களில் அலங்கார விளக்குகள் பொருத்தி அலங்கரித்து வழிபடுவர். இந்த பொருட்கள் விற்பனை திருப்பூர் நகரப் பகுதி கடைகளில் சூடுபிடிக்க துவங்கியுள்ளது.

    கிறிஸ்துமஸ் தாத்தா எனப்படும் சாண்டா கிளாஸ் முக வடிவிலான கவசம் மற்றும் உடைகள் விற்பனையும் காணப்படுகிறது. இவ்வகைப் பொருட்கள் 50 ரூபாய் முதல் 3500 ரூபாய் வரையிலான விலைகளில் விற்பனைக்கு வந்துள்ளன. கிறிஸ்துமஸ் குடில்கள் செட் ஆகவும், அதில் அமையவுள்ள உருவங்கள் மற்றும் நட்சத்திரங்கள், தேவதைகள் தனித்தனியாகவும் விற்பனையாகிறது.

    பண்டிகை கொண்டாடும் கிறிஸ்தவர்கள் குடும்பத்தாருடன் கடைகளில் இப்பொருட்களை தேர்வு செய்து வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    ஏராளமானோர் டிசம்பர் மாத தொடக்கத்திலேயே தங்கள் வீடுகளில் கிறிஸ்துமஸ் ஸ்டார்களை அமைத்து அதில் வண்ண விளக்குகள் பொருத்தி தங்கள் வீடுகளின் முன்புறத்தில் தொங்க விட்டுள்ளனர்.

    Next Story
    ×