என் மலர்
உள்ளூர் செய்திகள்

செய்யாறு ஒன்றியகிராமங்களில் தூய்மை பணிக்காக வண்டியை ஒ. ஜோதி எம்எல்ஏ பஞ்சாயத்து தலைவர்களிடம் ஒப்படைத்த போது எடுத்த படம்.
செய்யாறு ஒன்றியத்துக்குட்பட்ட 30 கிராமங்களின் தூய்மை பணிக்கு 41 புதிய வாகனங்கள்
- ஒ.ஜோதி எம்.எல்.ஏ. வழங்கினார்
- அங்கன்வாடி மையத்தை திறந்து வைத்தார்
செய்யாறு:
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு ஒன்றியத்துக்கு உட்பட்ட 30 கிராமங்களுக்கு தூய்மை பணிக்காக 41 மின்கலன் வாகனங்கள் வழங்கும் நிகழ்ச்சி, செய்யாறு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு ஒன்றிய குழு தலைவர் பாபு தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கோபாலகிருஷ்ணன், ஜெய்சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒ.ஜோதி எம்எல்ஏ கலந்துகொண்டு ரூ.1.16 கோடி மதிப்புள்ள 41 மின்கலன் வாகனங்களை 30 கிராம பஞ்சாயத்து தலைவர்களிடம் தூய்மைப் பணிக்காக வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன், அனக்காவூர் ஒன்றிய குழு தலைவர் திலகவதி ராஜ்குமார், ஒன்றிய செயலாளர்கள் ஞானவேல், ஜே. கே. சீனிவாசன், திராவிட முருகன், தினகரன், தொண்டரணி செயலாளர் ராம் ரவி, ஒப்பந்ததாரர் கோபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதனை தொடர்ந்து ஒ.ஜோதி எம்எல்ஏ செங்குட்டான் பகுதியில் அங்கன்வாடி கட்டிடத்தையும், அனக்காவூர்ஒன்றியம் பெண் இலுப்பை கிராமத்தில் அங்கன்வாடி மையத்தையும் திறந்து வைத்தார்.






