என் மலர்
உள்ளூர் செய்திகள்

செய்யாறு அரசு கல்லூரியில் ஆய்வகங்கள் அமைக்க பூமி பூஜை ஒ.ஜோதி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்த காட்சி.
செய்யாறு அரசு கல்லூரியில் ஆய்வகங்கள் அமைக்க பூமி பூஜை
- ஒ.ஜோதி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
- ரூ.5.28 கோடியில் கட்டப்படுகிறது
செய்யாறு:
செய்யாறு அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் அறிவியல் படிக்கும் மாணவ மாணவிகளுக்காக புதிய ஆய்வகங்கள் கட்டிடம் ரூ. 5.28 கோடி மதிப்பில் கட்டுவதற்கான பூமி பூஜை நேற்று கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் கலைவாணி தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக ஒ.ஜோதி எம்.எல்.ஏ. கலந்துகொண்டு புதிய கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் ஞானவேல், ராம் ரவி, கல்லூரி பேராசிரியர்கள், கவுரவ விரிவுரையாளர்கள், அலுவலகப் பணியாளர்கள் திமுக பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Next Story






