search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    100 ஏக்கர் விளை நிலங்கள் பாதிக்கப்பட்டதாக விவசாயிகள் மறியல்
    X

    விவசாயிகள் சாலையில் அமர்ந்து மறியல் செய்த காட்சி.

    100 ஏக்கர் விளை நிலங்கள் பாதிக்கப்பட்டதாக விவசாயிகள் மறியல்

    • அதிகாரிகள் பேச்சுவார்த்தை
    • டிரான்ஸ்பார்மர் பழுதால் மின்சார விநியோகம் துண்டிப்பு

    வந்தவாசி:

    வந்தவாசி அடுத்த சாலவேடு கிராமம் கிராமத்தில் திப்பம்மாள் நகர் பகுதியில் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.

    இந்த பகுதியில் டிரான்ஸ்பாரம் ஒன்று கடந்த 20 நாட்களாக பழுதானதால் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கர் விளை நிலங்கள் தண்ணீர் இல்லாமல் முற்றிலும் காய்ந்து போகும் அவலம் ஏற்பட்டுள்ளது.

    மறியல்

    மேலும் தற்போது கோடை காலம் என்பதால் 20 நாட்களாக மின்சாரம் இல்லாத காரணத்தால் தண்ணீர் இல்லாமல் நெல் பயிர்கள் கத்திரிக்காய், செடிகள் உள்ளிட்ட பல்வேறு பயிர்கள் முற்றிலும் காய்ந்து போனதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.

    மேலும் நகைகளை அடகு வைத்து விவசாயிகள் விவசாயம் செய்து வரும் நிலையில் 20 நாட்களாக பழுதான டிரான்ஸ்பார்மரை மின்சாரத்துறை அதிகாரிகள் சரி செய்யாமல் தொடர்ந்து மெத்தனப் போக்கில் செயல்பட்டு வருவதாக பாதிக்கப்பட்ட விவசாயிகளும் பொதுமக்களும் வேதனையுடன் குற்றம் சாட்டினர்.

    இந்த நிலையில் ஆத்திரமடைந்த 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் வந்தவாசி மேல்மருவத்தூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

    இதனால் வந்தவாசி மேல்மருவத்தூர் சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த கீழ்கொடுங்காலூர் போலீசார் சம்பவம் இடத்திற்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    இதனால் வந்தவாசி மேல்மருவத்தூர் சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    மேலும் மின்சாரத்துறை அதிகாரிகள் டிரான்ஸ்பார்மரை சரி செய்யவில்லை என்றால் மீண்டும் சாலை மறியலில் ஈடுபட போவதாக விவசாயிகள் கூறினர்.

    Next Story
    ×