search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆரணி ஒன்றிய அலுவலகம் முன்பு பெண்கள் போராட்டம்
    X

    போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள்.

    ஆரணி ஒன்றிய அலுவலகம் முன்பு பெண்கள் போராட்டம்

    • குடியிருப்பு பகுதியில் கழிவுநீர் சூழ்ந்ததால் ஆத்திரம்
    • அதிகாரிகள் பேச்சுவார்த்தையால் சமரசம்

    ஆரணி :

    திருவண்ணா மலை மாவட்டம் ஆரணி அருகே ராட்டினமங்கலம் ஊராட்சி க்குட்பட்ட பழையகாலனி பகுதியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

    தற்போது குடியிருப்பு பகுதியில் கழிவு நீர் மற்றும்கால்வாய் சூழ்ந்து கொண்டதால் குடியிருப்பு வாசிகளுக்கு நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    இதனால் ஊராட்சி மன்றத்திலும் மற்றும் ஆரணி ஓன்றிய அலுவலகத்திலும் பலமுறை மனு அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த ராட்டின மங்கலம் பெண்கள் ஆரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் முற்றுகை யிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நுழைந்த பெண்கள் சேர்மன் அறையின் முன்பு தரையில் அமர்ந்து கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

    பின்னர் அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் சமரசம் செய்து 2 தினங்களில் கழிவு நீர் கால்வாய் சரி செய்து நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதியளித்ததன் பேரில் கலைந்து சென்றனர்.

    இச்சம்பவம் அப்ப குதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×