என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா பத்திரிக்கைக்கு சிறப்பு பூஜை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா பத்திரிக்கைக்கு சிறப்பு பூஜை](https://media.maalaimalar.com/h-upload/2022/10/31/1784546-1361776-1thiruvannamalai.jpg)
கார்த்திகை தீபத் திருவிழா பத்திரிக்கைக்கு பூஜை செய்து வழங்கிய காட்சி.
அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா பத்திரிக்கைக்கு சிறப்பு பூஜை
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- 24-ந்தேதி துர்க்கை அம்மன் உற்சவத்துடன் தீப விழா தொடங்குகிறது
- டிசம்பர் மாதம் 6-ந் தேதி மகா தீபம் ஏற்றப்படுகிறது
திருவண்ணாமலை:
திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் பல்வேறு விழாக்கள் நடைபெறாலும் கார்த்திகை தீபத் திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.
இந்த ஆண்டிற்கான கார்த்திகை தீபத் திருவிழா வருகிற நவம்பர் மாதம் 24-ந்தேதி துர்க்கை அம்மன் உற்சவத்துடன் தொடங்குகிறது. தொடர்ந்து 27-ந் தேதி அதிகாலையில் சாமி சன்னதி முன்பு உள்ள தங்க கொடிமரத்தில் கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
விழாவின் சிகர நிகழ்ச்சி டிசம்பர் மாதம் 6-ந் தேதி காலையில் பரணி தீபமும், மாலையில் கோவில் பின்புறம் உள்ள மலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது.
இவ்விழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு கார்த்திகை தீபத் திருவிழா பத்திரிக்கை வழங்குவதற்காக கோவிலில் உள்ள சம்பந்த விநாயகர் சன்னதியில் பத்திரிக்கைக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது.
இதையடுத்து கோவில் சிவாச்சாரியார்கள் பூஜை செய்யப்பட்ட பத்திரிக்கைகளை கோவில் அலுவலர்களிடம் வழங்கினர்.
அதனை தொடர்ந்து கோவில் அலுவலர்கள் சிவாச்சாரியார்கள், அலுவலர்கள், பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு வழங்கி பத்திரிக்கை விநியோகம் செய்யும் பணியை தொடங்கி வைத்தனர்.