search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாநில சிறுபான்மையினர் ஆணையம் சார்பில் பேச்சுப்போட்டி
    X

    மாநில சிறுபான்மையினர் ஆணையம் சார்பில் பேச்சுப்போட்டி

    • கலெக்டர் முருகேஷ் தொடங்கி வைத்தார்
    • தமிழக அரசு காலை உணவுத் திட்டம் 1544 பள்ளிகளில் ஜூன் மாதத்தில் இருந்து நடைமுறைக்கு வரும்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணை பொறியியல் கல்லூரி அரங்கில், மாநில சிறுபான்மையினர் ஆணையம் சார்பில் அனைத்துக் கல்லூரி மாணவ, பேச்சுப் போட்டி நடந்தது. கலெக்டர் பா.முருகேஷ் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார். போட்டியில் பங்கு பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழினை வழங்கி அவர் பேசியதாவது:-

    கடுமையான முயற்சி செய்தால்தான் முன்னேற முடியும். விடா முயற்சி, கடுமையான உழைப்பு இதுதான் நமது முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் அப்போதுதான் நம்முடைய வாழ்க்கையில் முன்னேற முடியும் பேச்சுப்போட்டி என்பது கல்வி சார்ந்த ஆற்றலை அதிகப்படுத்துவது வாழ்கையில் கல்வி மட்டும் போதுமானது அல்ல. அதையும் தாண்டி பல்வேறு ஆற்றல்களை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

    மேலும் தனித்திறமைகள் மாணவர்களுக்கு தேவை. அரசை தேடி மக்கள் இல்லை மக்களைத் தேடி அரசு சென்று சேவை செய்யவேண்டும் என்பது தான் நமது பொதுப்பணி துைற அமைச்சரின் விருப்பம், ஒவ்வொரு தொகுதியிலும் நேரடியாக சென்று மக்களிடம் மனுக்களை பெற்று மனுக்களின் மீது தீர்வு காண்பதே தன்னுடைய தலையாய் கடைமையாக பணியாற்றி வருகின்றார்.

    மாணவர்கள் அரசுப் போட்டி தேர்வுக்கு தயாராவதற்கு வருகின்ற ஜூன் மாதத்திலிருந்து திருவண்ணாமலை செய்யாறு அரசுக்கலைக் கல்லூரிகளில் வகுப்பு தொடங்கப்படும் இந்த பயிற்சிக்கு வேலை வாய்ப்பு பயிற்சி துறையின் மூலமாக ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்படும் இதை மாணவர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

    மாணவர்கள் எந்த புத்தகத்தை வேண்டுமானாலும் இன்டர்நெட்டில் இ - புக் - ல் டவுன்லோட் செய்து பயன் பெறலாம் மற்றும் தமிழக அரசு காலை உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது நமது மாவட்டத்தில் 1544 பள்ளிகளில் ஜூன் மாதத்தில் இருந்து நடைமுறைக்கு வரும். இந்த திட்டங்களை பயன்படுத்திக் கொண்டு மாணவர்கள் வாழ்க்கையில் முன்னேற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    இந்நிகழ்ச்சியில் மாநில தடகள சங்க துணை தலைவர் எ.வ.வே.கம்பன், மாநில ஒருங்கிணைப்பாளர் ஜே. கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், மாவட்ட ஊராட்சி குழுத்தலைவர் . பார்வதி சீனிவாசன், திருவண்ணாமலை நகரமன்ற தலைவர் . நிர்மலா கார்த்தி வேல்மாறன், மற்றும் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×