என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
நுகர்பொருள் வாணிப கழக பணியாளர்களுக்கு 20 சதவீத போனஸ்: தமிழ்நாடு அரசு உத்தரவு
- நுகர்பொருள் வாணிப கழக பணியாளர்களுக்கு 20 சதவீத போனஸ் வழங்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
- சி மற்றும் டி பிரிவு பணியாளர்களுக்கு போனஸ் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை:
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக பணியாளர்களுக்கு 20 சதவீத போனஸ் வழங்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக இன்று வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணிபுரியும் சி மற்றும் டி பிரிவு பணியாளர்களுக்கு 2022-2023-ம் ஆண்டுக்கான போனஸ் 8.33 சதவீதம் மற்றும் கருணைத் தொகை 11.67 சதவீதம் என 20 சதவீதம் போனஸ் தொகை வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
போனஸ் சட்டத்தின் கீழ்வரும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு அவர்களுடைய சம்பளத்தில் 20 சதவீதம் (போனஸ் மற்றும் கருணைத்தொகை) வழங்க அரசு ஆணையிட்டுள்ளது.
இதுதவிர, தற்காலிக அடிப்படையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ரூ.3,000 கருணைத்தொகையாக வழங்கவும் ஆணையிடப்பட்டுள்ளது.
இதன்படி, சுமார் 49,023 பணியாளர்களுக்கு ரூ.29 கோடி போனஸ் மற்றும் கருணைத்தொகை வழங்க ஆணையிடப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.